முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில் ஹால் டிக்கெட். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில் ஹால் டிக்கெட்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்தத் தேர்வில் பங்கேற்க மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இந்த முறை இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும் எனவும், தபாலில் அனுப்பப்படாது எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி