"விதவைகள், விவாகரத்தான மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2013

"விதவைகள், விவாகரத்தான மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம்.

மறைந்த மத்திய அரசு ஊழியரின் விதவைகள் மற்றும் விவாகரத்தான மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என
மத்திய அரசுதெளிவுபடுத்தியுள்ளது.மத்திய அரசின் மற்ற அமைச்சகங்களும்,துறைகளும் இது தொடர்பாக விளக்கங்கள் கேட்ட நிலையில்,இது குறித்த சுற்றறிக்கையை மத்திய பணியாளர் நலன் அமைச்சகம் கடந்த வாரம் அனுப்பியுள்ளது.அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் வாழ்க்கைத் துணையோ அல்லது பெற்றோரைச் சார்ந்த வாரிசோ குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியானவர் ஆவார்.அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியத்துக்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ வருவாய் ஈட்டாத வாரிசே பெற்றோரைச் சார்ந்தவராக கருதப்படுவார்.எனவே,அரசு ஊழியர் இறப்பின்போது அல்லது அவரது வாழ்க்கைத் துணையின் இறப்பின்போது,எது பிந்தையதோ,அதன் பின்னர் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான மற்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வாரிசுதாரரே குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்.அதேபோன்று,தனது பெற்றோர் இறந்த பின்னர் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான மற்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்பட்சத்தில் விதவையான அல்லது விவாகரத்து பெற்ற மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெறமுடியும்.விதிமுறைகளின்படி,அரசு ஊழியர் இறந்த பின் அல்லது ஓய்வூதியதாரர் மறுமணம் புரிந்த பின், 25வயதுக்குள்பட்டஅவர்களது திருமணமாகாத வாரிசு குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்.மாற்றுத் திறனாளியான வாரிசுதாரருக்கு வாழ்நாள் முழுவதுமும்,அதன் பின்னர்25வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத,விதவையான,விவாகரத்து பெற்ற மகள்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.விதவைகளான அல்லது விவாகரத்து பெற்ற மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்த விதிமுறைகள் ஏற்கெனவே உள்ளன.நிலுவையில் உள்ள மனுக்களைப் பொருத்தவரை,தகுதியானவர்களுக்கு2004ஆகஸ்ட்30-ம்தேதி முதல் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி