அனைத்து இளநிலை பட்டப் படிப்புகளிலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடம் -- பரிசீலனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2013

அனைத்து இளநிலை பட்டப் படிப்புகளிலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடம் -- பரிசீலனை.

இளநிலைப் பட்டப் படிப்புகள் அனைத்திலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்குவது குறித்து சென்னைப்பல்கலைக்கழக கல்விக் குழு கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டது.கல்விக் குழு நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்த இந்த விஷயத்தை,கல்விக் குழு உறுப்பினரும்சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியருமான அரசு முன்வைத்து,வலியுறுத்திப் பேசினார்.இளநிலைப் பட்டப் படிப்புகளில் பெரும்பாலானவற்றில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது நான்கு பருவங்களுக்கு தமிழ்ப் பாடம் உள்ளது.ஆனால்,பி.சி.ஏ.,பி.பி.ஏ.,போன்ற படிப்புகளில் முதலாண்டில் மட்டுமே தமிழ்ப் பாடம் உள்ளது. பி.காம்.,போன்ற வணிகவியல் பட்டப் படிப்புகளில் முதலாண்டில் கூட தமிழ்ப் பாடம் இல்லை.இந்த நிலையில்,சென்னைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (செப்.28)நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்தில்,பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள அனைத்து கல்லூரிகளிலும் வழங்கப்படும் அனைத்து இளநிலை பட்டப் படிப்புகளிலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ் முதல் தாள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற பொருள் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது.அப்போது,ஒரு சில உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தபோதும்,பலர் இதற்கு தமிழக அரசின் அனுமதியைப் பெற வேண்டும்,தனிக் குழு அமைத்து ஆராய்ந்த பின்னர் இதுதொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பேராசிரியர் ரவீந்திரன்:அனைத்து இளநிலை பட்டப் படிப்புகளிலும் முதல் நான்கு பருவங்களுக்கு தமிழ்ப் பாடம் கொண்டுவர வேண்டும் என்பது குறித்து,கடந்த2012செப்டம்பர்29-ம் தேதி நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்திலேயே விவாதிக்கப்பட்டதோடு,ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இப்போது மீண்டும் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்படுவது என்பது தேவையற்றது.ஆனாலும் தமிழக அரசின் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பிறகே இதுகுறித்த முடிவு எடுக்க வேண்டும்.உறுப்பினர்பாபு:இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து பாடப் பிரிவு பேராசிரியர்களை உள்ளடக்கிய கூட்டுக் குழு ஒன்றை அமைத்து,அதன் ஆலோசனையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படுமானால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.உறுப்பினர் தியாகராஜன்:பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்,பிபிஏ. பட்டப்படிப்புகளில் முதலாண்டில் தமிழ்ப் மொழிப் பாடம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.இந்த நிலையில்,இந்தப் படிப்புகளில் இரண்டாம் ஆண்டிலும் கொண்டு வரவேண்டும் என்பது தேவையற்றது.இதற்கு பதிலளித்துப் பேசிய கல்விக் குழுத் தலைவரும்,பல்கலைக்கழகத் துணைவேந்தருமான தாண்டவன் கூறியது:இணைப்பு கல்லூரிகளுக்கு பாடத் திட்டத்தை வகுப்பது என்பது பல்கலைக்கழகத்துக்கு உள்ள அதிகாரம். எனவே,பாடத் திட்டத்தைஉருவாக்குவதற்கோ,மாற்றுவதற்கோ அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை. உடன்பாடும் இல்லை.உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்,அரசு அதிகாரி,வணிகப் பிரிவு பாடத்திட்டக் குழுத் தலைவர்,தமிழ்ப் பாடத் திட்டக் குழுத் தலைவர் ஆகியோர் அடங்கிய மூவர் குழு அமைத்து இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு,அவர்களின் பரிந்துரைகளை ஆட்சிமன்றக் குழுவில் விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி