பள்ளிகளுக்கு பத்து கட்டளைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2013

பள்ளிகளுக்கு பத்து கட்டளைகள்.

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு,மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்கள் உத்தரவிட்டுள்ளனர்.தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் மலேரியா,சிக்குன்குனியா போன்ற வைரஸ் காய்ச்சல் குழந்தைகள்,பள்ளி மாணவர்களை  எளிதில்தாக்கும். இதனால்,அவர்கள் உடல் நலம் கெடுவதுடன்,கல்வியும் பாதிக்கும். எனவே,நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரும்,தொடக்ககல்வித்துறைஇயக்குநரும் உத்தரவிட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும்,மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரும் தங்கள்கட்டுப்பாட்டில் வரும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டியன குறித்த பத்து கட்டளைகளையும் பிறப்பித்துள்ளனர்.
1. தற்போது மழைக்காலமாக இருப்பதால் பள்ளிவளாகத்தில் நீர்தேங்காமல் இப்பதற்கான தடுப்பு நடவடிக்கையை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
2.பள்ளிவளாகத்தில் குடிநீர்த்தொட்டி,கழிவுநீர்த்தொட்டி திறந்தநிலையில் இருத்தல்கூடாது.
3.பயனற்ற திறந்தவெளிக்கிணறு,பள்ளம் இருந்தால் அதை மூடிவிடவேண்டும்.
4.பள்ளிக்கழிவறையை சுத்தமாகவைத்துக் கொள்ள வேண்டும்.
5.பள்ளிவளாகத்தில் கழிவு நீர்க்கால்வாய் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாவதை சுகாதாரத்துறை மூலம் தடுக்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கைஎடுக்க வேண்டும்
6.பள்ளிவளாகத்தில் உபயோக மற்ற பிளாஸ்டிக் பொருட்கள்,வாகனடயர் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியை தடுக்கவேண்டும்
7.பள்ளி மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
8.பள்ளிவளாகத்தில் கட்டுமானப் பணிக்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் தேக்கிவைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
9.சிறுபள்ளம்,சிறுகிணறு இருந்தால்,அவற்றை மூடவேண்டும்.இது தொடர்பாக காலையில் நடக்கும் இறைவணக்கத்தின் போது மாணவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
10.வைரஸ்காய்ச்சல் தொடர்பாக மாணவர்கள் மூலம் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்தக் கட்டளைகளை அமல்படுத்தி நோய் தாக்குதலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கவேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.

1 comment:

  1. Katalaikalai pirapikathan therium niravatra theriadhu kadantha kalathai parthal latchnam theriadha

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி