ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2013

ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சுரேஷ்பாபு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1989-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன்.அதன் பிறகு, 1997-ஆம் ஆண்டு கோவை, சிங்காநல்லூரில் உள்ள பஞ்சாயத்துயூனியன் நடுநிலைப் பள்ளியில் அரசு வேலை கிடைத்ததும் அங்கு பணியில் சேர்ந்தேன். பிறகு, 10 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு வழங்கக்கூடிய தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்து 1999-ஆம் ஆண்டு எனக்குவழங்கப்பட்டது.இந்த நிலையில், அரசு தணிக்கை துறை ஆட்சேபனை தெரிவித்ததாகக் கூறி, எனக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை அந்தஸ்தை, பொள்ளாச்சி உதவி தொடக்க கல்வி அதிகாரி2006-ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டார். அதனால், எனக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை ரத்து செய்த தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.  இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்ததை ரத்து செய்யவில்லை. அதனால் அரசை ஏமாற்றி உள்ளார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் போது, அரசுப் பணியில் சேர்வதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், 1979-ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் பணியாற்றிய காலத்தை, தேர்வு நிலை ஆசிரியராகஅந்தஸ்து வழங்கும் போது கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் கூறப்பட்டுள்ளது.இது தவிர, தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்து வழங்கி 7 ஆண்டுகள் கழித்து அதை ரத்து செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதனால், தொடக்கக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மனுதாரரிடம் இருந்து பணம் திரும்பப் பெற்றிருந்தால் அதை அவரிடம் வழங்கவும் உத்தரவிடப்படுகிறதுஎன அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி