தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2013

தமிழகத்தில் நசுக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!


தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், சிறப்புக் கட்டணம் வழங்கப்படாததாலும் அப்பள்ளிகளின்
வளர்ச்சிகள் பாதிக்கப்பட்டு நசுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களின் அதிகமான தேர்ச்சி விழுக்காடே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம்: கடந்த 2009-ம் ஆண்டு முதல் மத்தியஅரசால் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்-2009 நடைமுறைபடுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் 2010 ஏப்ரல் முசல் நாளிலிருந்து நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய அம்சமாக 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக்கல்வி முடிக்கும் வரையில் அருகாமையில் உள்ள பள்ளிகளில் இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி அளித்த வேண்டும் என்பதே ஆகும். பள்ளியில் சேர்க்கப்படாமலோ அல்லது படிப்பை இடையில் நிறுத்தியிருந்தாலோ அக்குழந்தைக்குரிய வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும்.

உதாரணமாக பள்ளிக்கு செல்லாத ஒரு குழந்தை தனது 12 வயதில் பள்ளிக்கு வந்து தன்னை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டால் தலைமைஆசிரியர் அக்குழந்தையை 7-ம் வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும். அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றாலும், அவன் சொல்லும் பிறந்த தேதியை ஏற்றுக்கொண்டு, சேர்க்கை அளிக்க வேண்டும்.4 ஆண்டுகளாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்: ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது அடிப்படை கல்வித்தகுதியை பெற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில்கட்டாயம் தேர்ச்சி பெற்றவராத இருக்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் அரசு பள்ளிக்கு தேவையான பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் இதுவரை 50 சதவீதம் கூட தேர்ச்சிபெறவில்லை. அவ்வாறு தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில்தான் பணியில் சேருகிறார்கள். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் காலிப் பணியிடம் முழுவதும் நிரப்பப்பட்டு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உபரியாக இருக்கும் பட்சத்தில்தான் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனால் 4ஆண்டுகளாக அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் நிரப்பப்படாமல் காலிப் பணியிடங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.தொகுப்பூதிய ஆதசிரியர் நியமனம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது:தமிழகஅரசு தற்காலிகமாக தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை ரூ.5 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே நிரப்பிக் கொள்ளலாம் என சில நாட்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடியாத நிலையில், பள்ளிகளில் காலிப் பணியிடங்களாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களான (Non Teaching) இளநிலை உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட எந்த பணியிடங்களையும் கடந்த 4 ஆண்டுகளாக நிரப்புவதற்கு அரசு அனுமதி தர முன்வரவில்லை.2 ஆண்டுகளாக சிறப்பு கட்டணம் வழங்கப்படவில்லை: அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து வேறு எந்த கட்டணமும் பெறப்படாத நிலையில்சிறப்பு கட்டணம் மட்டும் (6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு ரூ.32, 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.47, 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.103) பெறப்பட்டு பள்ளியில் சில்லரை செலவினங்களை செய்து வந்தனர். இந்த கட்டணத்தையும் மாணவர்களிடம் வசூல் செய்ய வேண்டாம் என்றும், அரசே இந்த கட்டணத்தை பள்ளிக்கு வழங்கும் என முந்தையஅரசு அறிவித்து கொடுத்து வந்தது.

ஆனால் இந்த கட்டணம் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாததால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான சில்லரை செலவினங்களை தங்களது பணத்தை கொண்டு செலவு செய்துவிட்டு சிறப்புக்கட்டணத்தை எதிர்பார்த்து கொண்டு உள்ளனர்.எனவே அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யவும், 2 ஆண்டுகளாக வழங்கப்படாத சிறப்பு கட்டணத்தையும் வழங்கவும் தமிழக அரசு கல்வித்துறை நடவடிக்கை எடுக்காவிடில் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்தி காட்டி அரசு பெருமை சேர்த்து வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்படும்.

1 comment:

  1. Aided schools Teachers post podum pothe,,,
    pala lakhs lanjamaaga vaanguvathu Naadea Arintha visaiyam. ithu GOVT kum thearium. Antha panatha vatchi Extra teachers and staffs podatomea yeanru thaan Arasu intha salugaigalai koduka marukirathu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி