முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிடுவதற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிடுவதற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.

மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
நான் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 21.7.2013 அன்று நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான
தேர்வை நான் எழுதினேன். இதற்கான முடிவு 7.10.2013 அன்று வெளியிடப்பட்டது. அதில் 111 மதிப்பெண் பெற்றிருந்தேன். அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி 22–ந் தேதி(இன்று) நடக்க உள்ளது.
அழைப்பு இல்லை  :
என்னைப் போன்று 111 மதிப்பெண் பெற்ற மற்றொருவருக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.எனக்கு அழைப்பு இல்லை.இதுகுறித்து 15.10.2013 அன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்–செயலாளர் ஆகியோரிடம் முறையிட்டேன். ஆனால் எந்த தகவலும் இல்லை. கடந்த காலங்களில் பணியிடங்களுக்கான தேர்வு 1:2 என்ற விகிதப்படி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆனால் தற்போது 1:1 என்ற விகிதப்படி தேர்வு செய்வது நடைமுறையில் உள்ளது. பி.எட் படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. எனவே அதற்காகவும் மதிப்பெண் கிடைக்கும். எனவே சான்றிதழ் சரிபார்ப்பில் நான் கலந்து கொண்டால் கண்டிப்பாக தகுதி பெறுவேன். ஆகவே சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் எனது பெயரை சேர்க்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. வக்கீல் தாளைமுத்தரசு ஆஜரானார்.
முடிவை வெளியிட தடை :
இந்த மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்து, ‘‘முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதி தேர்வானவர்கள் அனைவரின் பட்டியலையும் தயார் செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.மேலும் இந்த வழக்கை வருகிற 28–ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

1 comment:

  1. if u go to court there is no justice,because i went to court last year for applied maths. still now post is not given even court ordered to give it.so i rejecting any trb exam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி