பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முன் பதிவு அவசியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2013

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முன் பதிவு அவசியம்.


வரும் நவ.1லிருந்து கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் "ஆன்லைன்" மூலமாக "அப்பாயின்மென்ட்" பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது; இதற்கேற்ப
ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கான பாஸ்போர்ட் அலுவலகம் கோவையில் செயல்படுகிறது. முன்பு பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாகவும் கலெக்டர் அலுவலகங்களில் உள்ள "மாவட்ட பாஸ்போர்ட் பிரிவு" மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தற்போது, "ஆன்லைன்" விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படுகின்றன; கட்டணம், சான்றிதழ் சரி பார்ப்பு உள்ளிட்ட பணிகள் பாஸ்போர்ட் சேவா கேந்திரத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு "ஆன்லைன்" மூலமாக "அப்பாயின்மென்ட்" பெறுவது கட்டாயமாக இருந்தது.அப்பாயின்மென்ட் கிடைப்பதேயில்லை என்ற புகார் அதிகரித்ததால் குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டு, "ஆன்லைன்" மூலமாக விண்ணப்பித்து விட்டு நேரடியாக வரலாம் என்று சலுகை வழங்கப்பட்டது. இதிலும், பாரபட்சம் இருப்பதாக புகார் எழுந்தது.இந்நிலையில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, "அப்பாயின்மென்ட்"களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி எல்லாப் பிரிவினருக்கும் "ஆன்லைன்" மூலமாக "அப்பாயின்மென்ட்" பெறுவது மீண்டும் கட்டாயமாக்கப்படவுள்ளது.

வரும் நவ.,1லிருந்து கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திலும் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட சில நாடுகளுக்குச் செல்வதற்கு வழங்கப்படும்"போலீஸ் கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட்" விண்ணப்பிப்போர்க்கு மட்டும்"அப்பாயின்மென்ட்" பெறுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்விரு பிரிவினரும் 24 மணி நேரத்துக்கு முன்பாக "ஆன்லைன்" மூலமாக விண்ணப்பித்து விட்டு"ஏ.ஆர்.என்.," எனப்படும் "அப்ளிகேஷன் ரெபரன்ஸ் நம்பர்"ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதனுடன் சான்றிதழ்களையும் எடுத்துக் கொண்டு மறுநாள் காலையில் கோவை பாஸ்போர்ட் சேவா கேந்திரத்துக்கு காலை 9.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள் நேரில் வரலாம்.மற்றவர்கள், "ஆன்லைன்" மூலமாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து"அப்பாயின்மென்ட்" பெற்ற பின் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நாட்களில் உரிய நேரத்துக்கு வர வேண்டும். கோவை பாஸ்போர்ட் சேவா கேந்திரத்துக்கு தினமும் 500விண்ணப்பதாரர்கள் வருவதால் நாளுக்கு 500 "அப்பாயின்மென்ட்"கள் வழங்கப்பட்டுவந்தன. வரும் நவ.1லிருந்து இது 525 ஆக உயர்த்தப்படவுள்ளது. அதில், 25"அப்பாயின்மென்ட்கள், "தட்கல்" விண்ணப்பதாரர்க்கு ஒதுக்கீடு செய்யப்படும்; அதுவும், முதல் நாளில் மட்டுமே திறக்கப்படும்.இனிமேல் அனைத்து "தட்கல்" விண்ணப்பதாரரும் முன்பே "அப்பாயின்மென்ட்" பெறுவது கட்டாயமாகும்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பி.சி.சி.,விண்ணப்பதாரர்களை பொறுத்தவரை காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் "முதலில் வருவோர்க்கு முன்னுரிமை" என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். அதன்பின், மற்ற பிரிவினருக்கு "டோக்கன்" வழங்கப்படும்.இதுதொடர்பான சந்தேகங்களுக்கு 0422- 230 1415, 2200 250,230 6111 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று, கோவை பாஸ்போர்ட் அலுவலர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

அதிகாரி எச்சரிக்கை

கோவை பாஸ்போர்ட் அலுவலர் சசிகுமார் கூறுகையில், "இதுவரை சேலம் மற்றும் நாமக்கல்மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மாவட்ட பாஸ்போர்ட் பிரிவு மூடப்படுகிறது. அந்த மாவட்டங்களில் உள்ளவர்களும், கட்டாயமாக "ஆன்லைன்" மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.பாஸ்போர்ட்டுக்கு சரியான ஆவணம், சரியான தகவல்களுடன் விண்ணப்பிப்பது அவசியம். தவறான தகவல், போலி ஆவணம் இருப்பதாகத் தெரிந்தால் பாஸ்போர்ட் சட்டம் 1967ன்படி 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரு தண்டனைகளும் சேர்த்து கிடைக்கும் வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி