விடுதிகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2013

விடுதிகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை.

விடுதியில் மாணவன் கொலைசெய்யப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் விடுதிகளை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மாணவன் கொலை நடந்த
பள்ளியின் விடுதியை மூடுவதற்கு, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டள்ளார்.திண்டுக்கல் ம.மு.,கோவிலூர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த ஆறாம்வகுப்பு மாணவன் ஹரிபிரசாத்தை, அதே விடுதியில் தங்கியிருந்த 10ம் வகுப்பு மாணவன் கொலை செய்தார். இதையடுத்து அந்த பள்ளியின் விடுதியை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்வத்தையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளை தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், மாணவர்களுக்குள்ள பிரச்னைகளை உடனடியாக தீர்க்கவும், விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாத மாணவ, மாணவிகளை பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி