பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாநில அளவில் விளையாட்டு போட்டிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2013

பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாநில அளவில் விளையாட்டு போட்டிகள்.


பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாநில அளவில் 12 விளையாட்டு போட்டிகள்இன்று தொடங்கி 29–ந்தேதி வரை நடக்கிறது விளையாட்டு மேம்பாட்டுக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.10 கோடி ஒதுக்கியதையொட்டி பள்ளிக்கூட மாணவர்களுக்கான
12 வகையான விளையாட்டு போட்டிகள் மாநில அளவில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 29–ந்தேதி வரை நடக்கிறது.பள்ளிக்கூட மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிப்பதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.10 கோடியை ஒதுக்கி உள்ளார். இதை யொட்டி பள்ளிக்கூட மாணவர்– மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மாநில அளவில் நடத்தப்படுகின்றன.

தேசிய அளவிலான போட்டிக்கும் அனுப்பப்படுகிறார்கள்.தற்போது மாநில அளவில் 12 வகையான விளையாட்டு போட்டிகள் இன்று முதல் 29–ந்தேதி நடத்தப்படுகின்றன. அந்த போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட இருக்கின்றன.விரைவு சைக்கிள் போட்டி, சிலம்பம், ஜூடோ ஆகிய போட்டிகள் இன்று தொடங்கி 20– ந்தேதி வரை ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. குத்துச்சண்டை, வாள்சண்டை (பென்சிங்) கேரம் ஆகியபோட்டிகள் விழுப்புரத்தில் 27–ந்தேதி முதல் 29– ந்தேதி வரை நடக்கின்றன.ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ், டேக்வொண்டோ( கராத்தேபோன்றவிளையாட்டு) ஆகியபோட்டிகள் 22–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை சேலத்தில் நடைபெற இருக்கிறது.டென்னிக்காய்ட், கடற்கரை வாலிபால், நீச்சல் ஆகிய போட்டிகள் 29–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. பரிசுகள் இந்த மாநில அளவிலான போட்டிகளில் முதல் இடத்தை பெறுபவர்களுக்கு ரூ.1,200 பரிசும், 2– வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.800 பரிசும், 3–வது இடத்தை பெறுபவர்களுக்கு ரூ.400 பரிசும் கொடுக்கப்பட இருக்கிறது. மேலும் சில பரிசுகளும் கொடுக்கப்பட இருக்கின்றன.

இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி