மூடுவிழாவை எதிர்நோக்கும் தையல் பயிற்சி வகுப்புகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2013

மூடுவிழாவை எதிர்நோக்கும் தையல் பயிற்சி வகுப்புகள்.


வை:புதிய தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளின் அறிமுகத்தால் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் இலவச தையல் பயிற்சி வகுப்புகளில் சேர மாணவர்கள் போதிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால்,
காலமாற்றத்துக்கு தகுந்த பயிற்சி வகுப்புகள் நடத்தினால், எளிதில் தொழில் வாய்ப்பை பெற முடியும் என வலியுறுத்தப்படுகிறது.சமூக நலத்துறை அலுவலகத்தின் கீழ், சூலூரில் அரசு தையல் பயிற்சி மையம் செயல்படுகிறது. தையல், எம்ப்ராய்டரி என தனித்தனியாக பிரித்து ஓராண்டு முழுவதும்பயிற்சி அளிக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு, சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக துவங்கப்பட்ட இத்திட்டத்தில் ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது.இதில், இந்தாண்டு பத்துக்கும் குறைவான மாணவர்களே பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு ஒரு தையல் பயிற்றுனர் பயிற்சி அளிக்கிறார். கணினி, அழகுக்கலை என தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே போவதால், குறுகிய கால பயிற்சி வகுப்புகளிலே பெரும்பாலானோர் நாட்டம் செலுத்துகின்றனர்.இதனால், அரசால் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தையல் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. ஓராண்டு பயிற்சி என்பதாலும், விரைவில் வேலை வாய்ப்பை துவங்க முடியாததாலும், பெரும்பாலானோர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை என கூறப்படுகிறது.

இந்த பயிற்சி மையத்தை நவீனமாக்கி புதிய தொழில்பயிற்சி வகுப்புகளை நடத்தினால், வரும் தலைமுறையினருக்கு, உதவியாக இருக்கும் என்பது, பெரும்பாலானோரின் கருத்து. காலமாற்றத்துக்கு தகுந்தபடி பயிற்சி வகுப்புகள் நடத்தினால், மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.மாவட்ட சமூக நல அலுவலர் ஷெரின் பிலிப்பிடம் கேட்டபோது, "அரசின் மானியத்தில் தான், இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இத்திட்டம் துவங்கப்பட்டது.இதில், புதிய வகுப்புகளை சேர்ப்பது குறித்து, அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இருப்பினும், இதுபோன்ற நவீன மாற்றங்களை தையல் பயிற்சி வகுப்புகளில் புகுத்துவதுதொடர்பாக, தலைமை அலுவலகத்துக்கு பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி