பகுதி நேர ஆசிரியர் சங்கம் நன்றி அறிவிப்பு மாநாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2013

பகுதி நேர ஆசிரியர் சங்கம் நன்றி அறிவிப்பு மாநாடு.


தமிழக அளவில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை நியமனம் செய்த, முதல்வர் ஜெ.,க்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு ஸ்ரீரங்கத்தில் நடத்துவதென, பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சிவகங்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் சங்க, மாநில மாநாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார்.

மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூ, துணை தலைவர் இளவரசன் கூறியதாவது:

தமிழகத்தில், 2011-12ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கட்டக்கலை, தோட்டக்கலை, கம்ப்யூட்டர் ஆகிய பாடங்களுக்கு,16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களை நியமனம் செய்து, முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். இதற்காக, ஸ்ரீரங்கத்தில் அவருக்கு சங்கம் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்படும்.கடந்த ஆண்டு, விபத்து உள்ளிட்ட வகையில் உயிரிழந்த 7 பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்திற்கு, நிதி உதவி அளிக்கவேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்தும், சிறப்பாசிரியர்கள் பணியில், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்து ஈடுபடுத்தவேண்டும். சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்குதல், தேர்வு அறை கண்காணிப்பாளர், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும், என்றனர்.

2 comments:

  1. ok.what about the cv conduted in june2013 for the part-time instructer

    ReplyDelete
  2. Kothanarkuda kurainthathu 15000 sambathikkaran kevalama kasukoduthu picha kasa sambathikkaran lanjam koduthu velai vangina ungalukkellam oru sangama sangama illai ungalukku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி