3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்.


அரசு ஊழ்யர்கள் சங்கத்தினர், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை, 1 நாள் அடையாள உண்ணாவிரதம் இரு்நதனர். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல்,
வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல், தொகுப்பு முறை ஊதியத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.தற்போது தமிழ்நாடு முழுவதும், மாவட்டம் தோறும், தாலுகா தலைமை இடங்களில் சங்கத்தினர் 1 நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.கமுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு வட்டார சங்க தலைவர் ஜி.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். வட்டார செயலர் கே.நாகலிங்கம், உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலர் செ.கணேசமூர்த்தி சிறப்புரையாற்றினார். மற்றும் மாவட்ட இணை செயலர் கே.மணி மொழி, மாவட்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலர் எஸ்.முத்து முருகன், மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள்சங்க துணை தலைவர் கே.சிவனு பூவன், மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்சங்க செயலர் ஏ.முருகேசன், வட்டார செயலர் என்.மூக்கூரான், நிறைப்பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். உண்ணாவிரதத்தில் 92 பெண் ஊழியர்கள் உள்பட 163 பேர் பங்கேற்றனர். வட்டார பொருளாளர் ஆ.பரமசிவம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி