சேமநல நிதி கையாடல்: ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2014

சேமநல நிதி கையாடல்: ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்


சிதம்பரம் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர்களின் சேமநல நிதிரூ.2 கோடி கையாடல் செய்யப்பட்டது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் நலச் சங்கம் மற்றும்
அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அனைத்து ஆசிரியர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் ரா.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில இணைச் செயலாளர் மு.ஆ.தமிழ்க்குமரன் முன்னிலை வகித்தார். அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ப.பெருஞ்சித்திரன், மாநில இணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன், அனைத்து ஆசிரியர்கள் நலச்சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஞா.விவேக், மகளிரணிச் செயலாளர் மு.ரேவதி, அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் துரை.மா,வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினார்.ஆர்ப்பாட்ட நிறைவில் உதவிஆட்சியரை சந்தித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மனு அளித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி