TET CV குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் பத்திரிக்கை செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2014

TET CV குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் பத்திரிக்கை செய்தி


புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் பத்திரிக்கை செய்தி : அவசரம்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபெற இருக்கிறது.
.மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் தகவல்.

புதுக்கோட்டை,ஜன,18-

ஆசிரியர் தகுதித்தேர்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபெற இருக்கிறது என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் திரு.நா.அருள்முருகன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆசிரியர் தோ்வு வாhpயத்தால் 2013-ம் ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்(தாள்2) மற்றும் இடைநிலை ஆசிரியர்(தாள்1) தகுதித்தோ்வு நடத்தப்பட்டது. அத்தோ்வில் தோ்ச்சிப்பெற்றவா்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற இருக்கிறது.

தகுதித்தேர்வில் தோ்ச்சி பெற்ற 677 நபா்களுக்கு
20-01-2014(திங்கட்கிழமை), 21-01-2014(செவ்வாய்கிழமை), 22-01-2014(புதன்கிழமை), 23-01-2014( வியாழக்கிழமை), மற்றும் 24-01-2014(வௌ்ளிக்கிழமை) ஆகிய 5 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது. எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தோ்ச்சிப்பெற்றவா்கள் அழைப்புக்கடிதம், ஆளறிச்சான்று மற்றும் உரிய ஆவணங்களை டி.ஆர்.பியின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ளபடி அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களுடன் மூன்று பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் அவரவா்க்கு அழைப்புக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதியில் காலை 9.30 மணிக்கு வருகை புரிந்திடவேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் தோ்ச்சிப்பெற்று அழைப்புக்கடிதம் பெற இயலாவிடில் உரிய ஆவணங்களுடன் முதன்மைக்கல்வி அலுவலரை தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

11 comments:

  1. Naan 2012-2013 June Bed mudithen, athanai thodarndhu
    TET paper2 august 18 I'll eludhinen
    Pass ahiviten, CV Ku 23/01/2014
    Selhiren enidam Bed provisional&
    Cumulative mark sheet erandu matum dhan ulladhu convocation
    Ennidam illai arivurai valangavum

    ReplyDelete
    Replies
    1. provisional is validity up to six months from issue date. So no problem.They don't ask any question about it. I attend tet cv last year 2012.

      Delete
    2. Thank you, tet cv last year 2012 attend panna vanga
      Thayavu seithu puthiavarhaluku arivurai valangungal , pudhiavargalum vetkapadamal thevaiana
      Sandhayhangalai kelungal

      Delete
    3. pona verification la provisional matum vachi posting koduthu erukanka. so dont worry. no problem.

      Delete
  2. No problem 2013 bed completed candidates u will take marklist and provisional only u r qualified

    ReplyDelete
  3. Sir i have only the consolidated and convocation for my degree. I dont have the 1st 2nd 3rd marksheets. Is it compulsory to produce all the semester marks seperatively? Pl. Tell me.

    ReplyDelete
  4. கல்யாணத்துக்கு முன்னாடி லவ் லட்டரா எழுதி குவிப்பாங்க. கல்யாணம் ஆன பின்பு ஒவ்வொன்னா கிழிச்சி போட்ருவாங்க. 15 வருசம் கழிஞ்ச பிறகு நீ ஒன் பொண்டாட்டிக்கு எழுதுன லவ் லட்டரு, ஒன் பொண்டாட்டி ஒனக்கு எழுதுன லவ் லட்டரு எல்லாத்தையும் இப்ப என்கிட்ட ஒப்படைன்னு பஞ்சாயத்து வச்சா எப்புடி. அதான் கல்யாணம் முடிச்சதுக்கு அடையாளமா தாலி இருக்கு. ரிஜிஸ்டர் ஆபிசுல பதிவு பண்ணுன சர்ட்டிபிகேட் இருக்கு. அத பாத்துகிட்டு வுட்ற வேண்டியதுதான.
    இதனால சகல சனங்களுக்கும் அறிவிக்கிறது என்னானா
    தாலி கட்டாதவங்க லவ் லட்டர (semester wise) காட்டுங்க.
    மத்தவங்க தாலிய (consolidated) காட்டுங்க.
    பஞ்சாயத்து ஓவர்.

    ReplyDelete
  5. pls see this number resulc 22105543 send mail
    id:arasupon22@gmail.com

    ReplyDelete
  6. I like the comment 6.59 P.M. I have only thali only now. No love letters friend. very very super.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி