முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம்
இதற்கான போட்டித்தேர்வை கடந்த ஜூலை மாதம் நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இதனையொட்டி பல பாடப்பிரிவுகளுக்கு தேர்வு எழுதிய ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார்கள். இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

அவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை–1 ஆகிய 5 பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற பாடங்களுக்கு உரிய ஆசிரியர் தேர்வு பட்டியல், கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. mr. mohan nanum etha than kegaren oruthanum solla matenkiran

    ReplyDelete
  3. wait pannunga boss namakku thaan kalviseithi irukkula perfectaa update panradhuku so konjam porumayaa irunga today court details naalaiku therinjirum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி