ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு.


ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ஆம் தேதி தொடங்கியது.

சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இப்போது நடைபெற்று வருகிறது.ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் 5 மையங்களில் நாளொன்றுக்கு 1,500 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளைப் பாதிக்காத வகையில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது.இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தமிழக அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் 46 ஆயிரம் பேர்கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11 comments:

  1. when will start Paper 2 verification?

    ReplyDelete
  2. Anybody know the date pls tell me.....

    ReplyDelete
  3. சான்றிதழ் சரிபார்ப்பு பேப்பர் 2 எப்போ

    ReplyDelete
    Replies
    1. Paper 2-ku 10th exam mudinthu thaan azhaippu varum

      Delete
    2. paper ii cv ku consolidate mark sheet avasiyama?

      Delete
    3. UBR how do u know that (paper 2 cv date) plz reply me.. i want to know that plz plz plz

      Delete
  4. tet passed candidates la working govt employees yaravathu irrukingala.
    Pls comment.

    ReplyDelete
  5. et எழுதி பணி வாய்ப்பு கிடைக்கும் வரை சோர்ந்துபோய் உக்கராமல் ஒரு தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அனைத்து மாவட்டங்களுக்கும் dealer தேவை.
    Online School Management Software மார்க்கெட்டிங் செய்து நன்றாக சம்பாதிக்க அணுகவும்.9600754477

    ReplyDelete
  6. can you pls explain me the job

    ReplyDelete
  7. when will cv finished for paper 1 any one know tell?

    ReplyDelete
  8. THE BELOW STATEMENT IS ELECTION வதந்தி

    ONE RETIRED IAS அதிகாரி OPPINTED FOR TET கேஸ்

    2013 இல் 90 மார்க்கு மேல் எடுத்தவர்களுக்கு JOB குடுக்க சொல்லிவிட்டார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி