ஆசிரியர் தகுதிதேர்வு இட ஒதுக்கீட்டை அழிக்கும் தமிழக அரசு? அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2014

ஆசிரியர் தகுதிதேர்வு இட ஒதுக்கீட்டை அழிக்கும் தமிழக அரசு? அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு.


தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் 15000 ஆனால் அறிவித்த காலிப்பணியிடம் 13000 .தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 12000 ஆனால் அறிவித்த காலிப்பணியிடம்
2000.பின்னர் சான்றிதழ் சரிபார்பிற்க்கு 27000 பேரையும் அலைய வைக்க வேண்டிய அவசியம் என்ன ?

* முதலில் TRB சார்பில் அரசு விளம்பரம் வெளியிட வேண்டும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில்,.

* அதன் பிறகு TET இல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்..

* விண்ணப்பித்தவர்களிடம் இருந்து தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்பிற்க்கான அழைப்பிதழ் கடிதம் அனுப்பிவைக்கப்படும்..

* சான்றிதழ் சரிபார்த்து முடிந்தபிறகு இறுதி பட்டியலுக்காக காத்திருக்கவேண்டும்..

* இறுதி பட்டியல் வந்த உடன் தங்களுக்கு உரிய பள்ளியை தேர்வு செய்ய கலந்தாய்வுக்கு சென்று பணி ஆணை வாங்கிய பிறகு தான் பணியில் சேர முடியும்..

* முறையான இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டால் மேலே சொன்ன வழி முறைகளின் படி நடந்தால் மட்டுமே சாத்தியம்..

ஆனால் தேர்தலை மனதில் கொண்டு தமிழக அரசு அவசர அவசரமாக தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் 15000 பேரையும், ஆசிரியர் பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற 12000 பேரையும் சான்றிதழ் சரிபார்பிற்க்காக அழைத்துள்ளது..

இது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக அமைந்துள்ளது,முறையான இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கபடாவிட்டால் முதல் கட்டமாக போராட்டம் நடத்தப்படும், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துபணி நியமனத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடரப்படும் என்று அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது...

அரசு சொன்ன எண்ணிக்கையின் அடிப்படையில் கீழ்கண்டவாறு பணி நியமனம் இருக்கவேண்டும் இருக்குமா ?.சமூக நீதியை வேரறுத்து இட ஒதுகீட்டையே காலி செய்ய நினைக்கின்றது தமிழக அரசு என்ற எண்ணம் மக்களிடம் வேருன்ற தொடங்கிவிட்டது?..இதன் பலனை வரும் தேர்தலிலே சந்திக்க வேண்டி இருக்குமா?

7 comments:

  1. Mark Relaxation had not been given in 2012 for reservation category candidates as per guideslines of NCTE and GO no 181.. Also we understand that reservation had not been considered in recruitment. Hence we request kindly file a petition to cancel the 2012 recruitment and prepare new selection list after including the name of the candidates who had scored above 82 in 2012 TET.

    ReplyDelete
  2. கனவான்களே(கூட்டமைப்பு) இதன் மூலம் தாங்கள் சொல்லவருவதுதான் என்ன?...நாங்கள் பணிநியமனம் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருகிறீர்களா?...இல்லை பணிநியமனம் பெற உதவியாக இருக்கபோகிறீர்களா?..

    ஏன் இப்படி ஒரு அறிக்கை...TET ல தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதல் சரிபார்ப்பு நடத்தினால் தான் தகுதி சான்று தரமுடியும் என்ற சிறிய உண்மைகூட ஏன் உங்களுக்கு தெரியவில்லை...

    இதற்க்கு பின்பும் நாங்கள் அரசிடம் வேலை கொடுங்கள் என்று விண்ணப்பிக்க வேண்டுமா..நாங்கள் வேலை வேண்டித்தானே இந்த தேர்வையே எழுதினோம் என்பது அரசுக்கு புரிந்தாலும் உங்களுக்கு ஏன் புரியவில்லை...

    இதற்கென தனியாக விண்ணப்ப கட்டணம் என்று இன்னும் 500 ருபாய் நாங்கள் செலவு செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலா...

    உங்களின் சில கோரிக்கைகள் மட்டுமே எங்கள் நலன் பற்றியதாக உள்ளது...

    உண்மையில் நீங்கள் எங்களுக்கு ஆதரவாக கோரிக்கை வைகின்றீர்களா....???

    தயவு செய்து எங்களை மேலும் அலைய வைத்து விடாதீர்கள்....ஏற்கனவே பலமுறை நொந்து போய்தான்... இங்கே நல்லமனநிலையில் ....ஒரு நல்ல ஆசிரியராக இருப்பது போல் நடித்து கொண்டிருக்கிறோம்...வேண்டாம் விட்டு விடுங்கள்....

    ReplyDelete
  3. முடிந்தால் இறுதி பட்டியல் இதுவரை நடந்ததற்கு வெளியிட சொல்லுங்கள்...

    மொத்த காலிபணியிடங்கள் எத்தனை என்பதை வெளியிட சொல்லுங்கள்....
    அதில் பிரிவு வாரியாக எவ்வளவு என்று சொல்லசொல்லுங்கள்....

    அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பு பணிநியமனம் செய்ய சொல்லுங்கள்..

    ReplyDelete
  4. Mela kurippta seiyalgal nadai pera ennum 6 mathangal aagum pola.

    ReplyDelete
  5. எரிகிற நெருப்பில் எண்ணெய்

    ஊற்றியது போல்்்்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி