திறந்தவெளி பல்கலையில் படித்தவருக்கும் ஆசிரியர் வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2014

திறந்தவெளி பல்கலையில் படித்தவருக்கும் ஆசிரியர் வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு.


திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்தவர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி கனிமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் 10ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 12ம் வகுப்பு படிக்காமல் டிகிரியை திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் படித்து முடித்தேன். பின்னர் பட்டமேற் படிப்பை கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அதன்பிறகு முழு கல்வி தகுதி பெற பிளஸ் 2 தனியாக தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். அதன்பிறகு ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்று எழுத்து தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால் எனக்கு ஆசிரியர் பணி வழங்க அரசு மறுத்து விட்டது.எனவே எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து, மனுதாரர் உரிய கல்வித்தகுதி பெற்றுள்ளார். அவர் எப்படி படித்தார் என்று கணக்கில் எடுத்துக்கொண்டது தவறானது. எனவே அவரது கல்வி தகுதியை கருத்தில் கொண்டு பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

4 comments:

  1. ayya u r genius duo to kalvi mathipiai muthithathan vilaivai kitaithouthu than 12 certificate aathi epativentoumananoulm mutikatoumee.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி