வாக்காளர் பட்டியலில் திருநங்கைகளுக்கு தனி பாலினம்: தேர்தல் ஆணையம் உறுதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2014

வாக்காளர் பட்டியலில் திருநங்கைகளுக்கு தனி பாலினம்: தேர்தல் ஆணையம் உறுதி.


வாக்காளர் பட்டியலில் திருநங்கைகள் பெயர் சேர்ப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
இது குறித்து, புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்துள்ள திருநங்கைகள் பலரும், தங்களது பாலினத்தை பெண் என்றே குறிப்பிட்டுள்ளனர்.ஆனாலும், தங்களை தனியாகக் குறிப்பிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்களும் என்னை வந்து சந்தித்தனர்.இந்தப் பிரச்னை தொடர்பாக, தேர்தல் முடிந்த பிறகு திருநங்கைகளை அழைத்து ஆலோசனை நடத்துவோம். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.கோயில் திருவிழாக்கள்: மாநிலத்தில் கோயில் திருவிழாக்களை நடத்த எந்தத் தடையும் இல்லை.

ஆனால், இந்த விழாக்களில் அரசியல் கட்சியினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கக் கூடாது. போஸ்டர்கள், பேனர்கள் வைக்கக்கூடாது.தேர்தல் பிரசாரம் செய்வது போன்று திருவிழாக்கள் நடத்தப்பட்டால் அது குற்றமாகும்என்றார் பிரவீண்குமார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி