10, 12-வது வகுப்பு மாணவர்களுக்கு மேல்படிப்புக்கான ஆலோசனை நிகழ்ச்சி: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2014

10, 12-வது வகுப்பு மாணவர்களுக்கு மேல்படிப்புக்கான ஆலோசனை நிகழ்ச்சி: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.


10-வது மற்றும் 12-வது வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் மேல்படிப்பு படிப்பதற்கு ஆலோசனை நிகழ்ச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் மேலும் எந்த படிப்பை படிக்கலாம்?.என்ன குரூப் எடுக்கலாம்?. எந்த படிப்பு படித்தால் எதிர்காலத்தில் என்ன பதவிக்கு வரலாம்?. என்ன வேலை கிடைக்கும்? என்பதை ஒவ்வொரு துறைக்கும் உள்ள நிபுணர்களை கொண்டு மாணவர்களை தெளிவாக இருக்கச்செய்ய அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதல் முதலாக மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-மாணவர்களின் வருங்கால கல்வி சார்ந்த ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சியை அனைத்து மாவட்டத்திலும் நடத்துங்கள். பெரிய பள்ளிக்கூடமாக இருந்தால் அந்த பள்ளியிலேயே நடத்தலாம். மாவட்டத்தில் 2 அல்லது 3 இடங்களில் நடத்தி அனைத்து மாணவர்களையும்அங்கு வரவழைக்கலாம்.

இந்த நிகழ்ச்சியை கோடை விடுமுறை நாட்களில் நடத்தப்பட வேண்டும். மொத்தத்தில் மாணவ-மாணவிகள் பயன்பெறவேண்டும்.பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 9-ந்தேதி வர உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மே மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. எனவே அந்த முடிவு வருவதற்குஉள்ளாக இந்த கல்வி ஆலோசனை நிகழ்ச்சியை நடத்தவேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி