சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2014

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?


மக்களவைத் தேர்தல் காரணமாக சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் டி.டி. சுதர்சன ராவ் கூறினார்.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக ஒரு சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.இதன் காரணமாக, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேர்வுகள் தாமதமாக முடிவடைவதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுமோ என பெற்றோர்கள், ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர். இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலரான சுதர்சன ராவிடம் கேட்டபோது,""பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி தொடர்பாக புது தில்லியில் உள்ள சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகம்தான் முடிவு எடுக்க வேண்டும். தேர்வுகள் தள்ளிவைப்பு காரணமாக, தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமும் இருக்காது. வழக்கம் போல மே 3-ஆவது வாரத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்'' என தெரிவித்தார்.

தமிழகத்தில் பி.இ. படிப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி பெரும்பாலும் மே மூன்றாவது வாரத்தில் இருக்கும். பி.இ. விண்ணப்பத்தோடு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் நகலையும் இணைக்க வேண்டியிருப்பதால், இவர்களின் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதிலும் சிக்கல் உள்ளது.கடந்த ஆண்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை மே 30-ஆம் தேதி வரை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே போன்ற ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே சி.பி.எஸ்.இ. மாணவர்களால் பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி