இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2014

இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது.


இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது.

5 சதவீத மதிப்பெண் சலுகை


ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும், இந்தசலுகை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில்அறிவித்தார். இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் 150–க்கு 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது.ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பின் 82 முதல் 89 மதிப்பெண்கள் எடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 5 மையங்களில் கடந்த மார்ச் மாதம் நடந்தது. திருச்சியில் ஜங்ஷன் அருகே வாசவி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

பட்டதாரி ஆசிரியர்கள்

இந்த நிலையில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது.

இது குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் கூறுகையில், ‘‘5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி மே மாதம் 6–ந் தேதி தொடங்குகிறது. திருச்சியில் வாசவி வித்யாலாய பள்ளியில் இந்த பணி நடைபெற உள்ளது.இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 1,086 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது. மே 12–ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடையும்’’ என்றார்.

2 comments:

  1. TET ல 90 mark எடுத்து CV போய்டு வந்தவங்கல நீங்க ? அப்படின எனக்கு பதில் சொல்லுங்கப மதிப்பெண் சதவிதம் எப்படி கணக்கிடுவது ?

    ReplyDelete
  2. Wats d procedure to get conduct certificate for CV? Can v get ithink from any gazetted official? From which Web site v can download the conduct certificate form? Kindly reply..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி