இந்தியாவின் நவீன ரக ஏவுகணை சோதனை வெற்றி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2014

இந்தியாவின் நவீன ரக ஏவுகணை சோதனை வெற்றி




 




ஒடிஷாவின் வீலர் தீவில் இந்தியா இன்று காலை நவீன ரக ஏவுகணையை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இந்த ஏவுகணை எதிரிநாட்டு ஏவுகணை, போர் விமானங்களை நடு வானில் இடைமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் படைத்தது என ராணுவ தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து ராணுவத்திற்கான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை தயாரிக்கும் டிஆர்டிஓ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரவிகுமார் குப்தா கூறும் போது கடற்படை விமானத்தில் இருந்து காலை 9 மணி ஆறு நிமிடங்களுக்கு எதிரி இலக்காக கருதப்படும் ஏவுகணை ஏவப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரேடார் மூலம் கிடைத்த சமிக்கைகளைக் கொண்டு, வீலர் தீவில் இருந்து சென்ற நவீன ரக ஏவுகணை, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்தது என்று கூறினார். 
மேலும் சோதனை இலக்கு இயக்குனர் M.V.K.V. பிரசாத் இந்த தோதனை வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி