அனுமதியின்றி பாடப்புத்தகங்களை எடுத்துச்சென்ற கல்வித்துறை ஊழியர் இடைநீக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

அனுமதியின்றி பாடப்புத்தகங்களை எடுத்துச்சென்ற கல்வித்துறை ஊழியர் இடைநீக்கம்.


அனுமதியின்றி பள்ளி பாடப்புத்தகங்களை எடுத்துசென்ற பழநி மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார்.
பழநி மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் சிவசண்முகம். இவர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 2005-06 கல்வியாண்டிற்கான பள்ளி பாடப்புத்தகங்களை அனுமதியின்றி எடுத்துசென்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கலையரசி விசாரணை நடத்தினார்.விசாரணையில், கரையானால் அரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை அவர் வெளியில் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பாடப்புத்தகங்களை அனுமதியின்றி எடுத்து சென்றசிவசண்முகத்தை "சஸ்பெண்ட்"&' செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி