பி.எஸ்.என்.எல்-லில் "வைமேக்ஸ்" சேவை நிறுத்த திட்டம்: கல்லூரிகள் திணறல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2014

பி.எஸ்.என்.எல்-லில் "வைமேக்ஸ்" சேவை நிறுத்த திட்டம்: கல்லூரிகள் திணறல்


்"வைமேக்ஸ்" சேவையை நிறுத்த பி.எஸ்.என்.எல்.-ன் உத்தரவிட்டதால், இச்சேவை பெற்றுள்ள கல்லூரிகள் இன்டர்நெட் பயன்படுத்த முடியாமல்திணறுகின்றன.
பி.எஸ்.என்.எல். சார்பில் லீஸ்ட் லைன், பிராட்பேண்ட் ஆகிய தரை வழி இணைப்பு மூலம் போன் மற்றும் இன்டர்நெட் கனெக்ஷன் வழங்கப்பட்டு வந்தது. தரைவழி இணைப்பு மூலம் வழங்க இயலாதவர்களுக்கு "வைமேக்ஸ்" சேவையை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்தது. ஸ்பெக்ட்ரத்தில் இதனுடைய ஏலத்தொகை அதிகமாக இருந்ததாலும், அதற்கேற்ப பயன்பாடு குறைவாக உள்ளதால், மேற்கொண்டு இச்சேவையை தொடர முடியாது என பி.எஸ்.என்.எல். டிராயிடம் விண்ணப்பித்து இவ்வசதியை சரண்டர் செய்வதென அறிவித்தது.இதனால், பி.எஸ்.என்.எல். சார்பில் வழங்கிய "வைமேக்ஸ்" சேவையை நிறுத்த உள்ளதாகவாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

காரைக்குடி மண்டலத்திற்கு உட்பட்ட சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இச்சேவை பெற்றுள்ள 600 பேர்களுக்கு நோட்டீஸ் சென்றுள்ளது. இச்சேவையை, அதிகளவில் தனியார் கல்லூரிகள் பயன்படுத்தி வந்தன. ஒரு "வைமேக்ஸ்" கனெக்ஷன் வாங்கி "வைஃபை" தொழில் நுட்பத்தில் ஏராமான கம்ப்யூட்டர்களுக்கு இணையதள பயன்பாட்டை அளித்து வந்தது."வைமேக்ஸ்" நிறுத்தத்தாலும், தரைவழி இணைப்பு பெற முடியாததாலும், இன்டர்நெட் பயன்படுத்த முடியாமல் கல்லூரிகள் திணறி வருகின்றன. கல்லூரி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசிய அறிவு சார் நெட்வொர்க் திட்டத்தின் கீழ்"என்.எம்.இ.ஐ.சி.டி." (நேஷனல் மிஷின் ஆன் எஜூகேஷன் இன்பர்மேஷன் அன்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி) மூலம் "வைமேக்ஸ்" தொழில் நுட்பத்தில் கல்லூரிகளில் 10 எம்.பி. இன்டர் நெட் இணைப்பு வாங்கி அதை பல்வேறு கம்ப்யூட்டர்களுக்கு"வைஃபை" தொழில் நுட்பத்தில் பிரித்து வழங்கலாம்.இந்தத் திட்டத்தில் ஒரு கல்லூரிக்கு மாதம் ஒன்றுக்கு 10 கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்பாட்டுக்கு ரூ.1,300 மட்டுமே செலவாகும்.

தற்போது"வைமேக்ஸ்" தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வரும் நாங்கள், தரைவழி இணைப்பு இல்லாததால் ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்துக்கு மாற வேண்டும். இதில், ஸ்பீடு குறைவாக இருக்கும். டேட்டா கார்டு பொருத்தியிருக்கும் கம்ப்யூட்டரில் மட்டுமே இணையதளம் பயன்படுத்த முடியும். அனைத்து கம்ப்யூட்டருக்கும் டேட்டா கார்டு, "அன் லிமிட்டடில்" பொருத்தினால் மாதம் ரூ. 40,000 செலவாகும், என்றார்.இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர் கூறுகையில், "வைமேக்ஸ்" தொழில் நுட்பம் பெற்றுள்ள கல்லூரிகள் மாற்று ஏற்பாடாக சி.டி.எம்.ஏ., ஜி.எஸ்.எம்., தொழில் நுட்பத்திலான டேட்டா கார்டுகளை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால், வைமேக்ஸ் அளவுக்கு ஸ்பீடு கிடைப்பது கடினம் தான்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி