பி.இ. கலந்தாய்வு: விவரங்களை அறிய "3ஜி' அப்ளிகேஷன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2014

பி.இ. கலந்தாய்வு: விவரங்களை அறிய "3ஜி' அப்ளிகேஷன்


பி.இ. கலந்தாய்வு தொடர்பான விவரங்களை மாணவர்கள் எளிதாகத் தெரிந்து கொள்வதற்காக "3ஜி' அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம்திட்டமிட்டுள்ளது.
பி.இ. கலந்தாய்வு கமிட்டி ஒப்புதல் கிடைத்தவுடன், இந்தபுதிய நடைமுறை அமலுக்குக் கொண்டுவரப்படும் என பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.2014-15 கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் மே 3-ஆம் தேதி தொடங்குகிறது."எஸ்.எம்.எஸ். அலர்ட்': கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும் என்பதோடு, எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்கள் அளிக்கும் வசதி கடந்த 2013-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.அதாவது, கலந்தாய்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டது.இதற்காக விண்ணப்பத்தோடு அவர்களது செல்பேசி எண்ணும் பெறப்பட்டது.

வழக்கமான அழைப்புக் கடிதம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் லிஸ்ட்ஆகியவற்றோடு இந்த எஸ்.எம்.எஸ். தகவல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நடைமுறை இந்த ஆண்டும் தொடரும் என்பதோடு, புதிதாக"டி.என்.இ.ஏ.' என்ற பெயரில் புதிதாக 3ஜி அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.இந்த இலவச அப்ளிகேஷனை மாணவர்கள் தங்களுடைய செல்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.பின்னர் விண்ணப்ப எண்ணை சமர்ப்பித்தால், கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்கின்றனர் பல்கலைக்கழக நிர்வாகிகள்.

4 comments:

  1. முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரிலீஸ் எப்போது: தேர்வர்கள் ஆவேசம்
    --- தினமலர் நாளேடு

    முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, தேர்வர்கள் நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அரசு உத்தரவு : அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டது. இதில், தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டும், இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்துள்ளது. 600க்கும் அதிகமான தமிழ் ஆசிரியர்கள், பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட, பல முக்கிய பாடங்களுக்கு இறுதி தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., இன்னும் வெளியிடவில்லை.
    இதைக் கண்டித்து, முதுகலை தேர்வர்கள், நேற்று காலை, சென்னையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள், மேற்கண்ட பாடங்களுக்கு, இறுதி தேர்வு பட்டியலை, உடனடியாக வெளியிட வலியுறுத்தினர்.

    பணி நியமனம் : இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: ஒரே போட்டித் தேர்வில், குறிப்பிட்ட பாடத்தை சேர்ந்தவர்கள் மட்டும், பணி நியமனம் பெற்று உள்ளனர். எங்களுக்கு இன்னும், தேர்வு இறுதி பட்டியலையே வெளியிடாமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னை, உயர்நீதிமன்றத்தில், 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்' என, தெரிவித்தனர். ஆனால், எங்களுக்கு தெரிந்து, வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. வேண்டுமென்றே, டி.ஆர்.பி., இழுத்தடிப்பு வேலையை செய்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழக அரசு, இந்த பிரச்னையை உடனடியாக தீர்க்க, முன்வர வேண்டும்.
    இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இன்று சென்னை உயர்நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்கு ஒன்று இடம்பெற்றுள்ளது

    WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD (FOR RECRUITMENT
    WEIGHTAGE OF MARKS
    PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி