ஆசிரியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுப்பு: மாவட்ட ஆட்சியர் மீது திமுக புகார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

ஆசிரியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுப்பு: மாவட்ட ஆட்சியர் மீது திமுக புகார்.


ஆசிரியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டதற்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ந.வெங்கடாசலம் தான் பொறுப்பு என திமுக மாவட்ட செயலர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் தெரிவித்தது:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பணிகளில் அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பல்வேறு பகுதிகளிலும் மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் போது வாக்குச்சாவடி அலுவலர்கள் 12ஏ படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், பணிபுரியும் வாக்குச் சாவடிகளிலேயே தங்களுது வாக்கை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.3ஆவது கட்ட பயிற்சிக்கு பின்னும், 12ஏ படிவம் பல ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்ட ஆசிரியர்களுகளிடம், வாக்குப் பதிவு நாளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் தேர்தல் முடிந்து 4 நாள்கள் ஆன போதி்லும் இதுவரை அவர்களுக்கான வாக்குரிமை வழங்கப்படவில்லை.தமிழக அரசுக்கு ஆதரவாக, மாவட்ட தேர்தல் அலுவலர் செயல்படுகிறார். ஆசிரியர்கள், தங்களின் ஜனநாயக கடமையை செய்யவிடாமல் மாவட்ட நிர்வாகம் தடுத்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல்ஆணையருக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.8ஆயிரம் ஆசிரியர்களில், 1600க்கும் மேற்பட்டோருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே இந்த நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியரும், அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளும் செய்துள்ளனர்.

மே 1ஆம் தேதிக்குள் 1600 ஆசிரியர்களுக்கும் வாக்களிக்க அனுமதி வழங்காவிட்டால், திண்டுக்கல் மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டத்தை திமுக சார்பில் நடத்துவோம். அதுபோல் மாவட்ட ஆட்சியர் மீதும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சியர் மீது பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடிவடக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் பார்வையாளரின்(பொது) செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லை என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி