தேர்தல் பணியில் மரணம் - நிவாரணம் கோரி கலெக்டர் கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

தேர்தல் பணியில் மரணம் - நிவாரணம் கோரி கலெக்டர் கடிதம்.


தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மரணமடைந்ததை அடுத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு, கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில், தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 6 லட்சம் பேர் ஈடுபட்டனர். அவர்களுக்கு, கிரேடு அடிப்படையில், ஒரு நாள் ஊதியம் வழங்கப்பட்டது. மேட்டூர், கொளத்தூர் பெருமாள் கோவில் நத்தம் பள்ளி தலைமைஆசிரியர் தங்கராசு, 44, தர்மபுரி, கொளத்தூர் கே.பள்ளிப்பட்டி ஓட்டுச்சாவடியில் பணியாற்றினார்.ஓட்டுப்பதிவு முடிந்து வீடு திரும்பியவர் மாரடைப்பில் மரணமடைந்தார். அதேபோல், கெங்கவல்லி தாலுகா அலுவலக உதவியாளர் மாரிமுத்து, 56, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இவர்கள் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்கக் கோரி, தேர்தல் கமிஷனுக்கு, சேலம் கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி