கலை, அறிவியல் படிப்பிற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வினியோகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2014

கலை, அறிவியல் படிப்பிற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வினியோகம்.


தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
இவர்களில் பெரும் பகுதியினர் கலை அறிவியல் படிப்பில் சேரும் வழக்கம்தான் நடைமுறையில் உள்ளது.கலை அறிவியல் படிப்பிற்கு அடுத்தபடியாக என்ஜினீயரிங் பட்டப்படிப்பிலும், பாலிடெக்னிக் படிப்பிலும்தான் அதிகம் பேர் சேர்கிறார்கள். குறிப்பாக பாலிடெக்னிக் படிப்பில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற உடன்தான் அதிக மாணவர்கள் சேர்கிறார்கள். பிளஸ்-2 முடித்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் சேர்கிறார்கள்.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம், நர்சிங், பிஸியோதெரபி, மருந்தாளுனர் படிப்பு, வேளாண்மை ஆகிய படிப்புகளில் குறைந்த மாணவர்களே சேர்கிறார்கள். மருத்துவப்படிப்பில் மட்டும் அதிகம் பேர் சேர விரும்புகிறார்கள்.

ஆனால் மருத்துவப்படிப்பில் சேர குறைந்த இடங்களே உள்ளன.பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் அறிவித்து இருக்கிறார். இந்த முடிவு வருவதையொட்டியும் மதிப்பெண் எடுப்பதையொட்டியும் பெரும்பாலான மாணவ-மாணவிகள் தங்கள் படிக்க உள்ள மேல்படிப்பை முடிவு செய்கிறார்கள். கலை அறிவியல் படிப்புகளில் பல புதிய படிப்புகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் படிப்புகள் ஆகும்.எனவே கடந்த வருடம் கலை அறிவியல் படிப்பில் மாணவ-மாணவிகள் சேரும் ஆர்வம் அதிகரித்தது. அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 635 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் கடந்த வருடம் 2 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கிறார்கள்.இந்த வருடம் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர தமிழ்நாடு முழுவதும் மே முதல் வாரத்தில்தான் விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி