லேப்-டாப் வினியோகத்தில் தொடரும் தாமதம்; நடப்பு கல்வியாண்டில் யாருக்கும் இல்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2014

லேப்-டாப் வினியோகத்தில் தொடரும் தாமதம்; நடப்பு கல்வியாண்டில் யாருக்கும் இல்லை.


மாநிலம் முழுவதும் 2013-14ம் ஆண்டிற்கான இலவச லேப்-டாப் மாணவர்களுக்கு இதுவரை வினியோகிக்கப்படவில்லை.
பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு ஆண்டும் இறுதித் தேர்வுகள் முடிந்த பிறகே லேப்-டாப் மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பதாக, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு நலத்திட்டத்தின் கீழ் சீருடை, புத்தகம், நோட், வண்ண பென்சில், காலணிகள், சைக்கிள், லேப்-டாப் உட்பட பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான நலத்திட்ட பொருட்களை வினியோகித்து வருகிறது. இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியாக ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்களின் தொழில்நுட்பதிறனை மேம்படுத்தும் நோக்கில் இலவச லேப்-டாப் பிளஸ் 2 மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.லேப்-டாப் வினியோகத்திற்காக கடந்த 2011-12, 2012-13ம் ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு 1637.78 கோடி ரூபாயும், நடப்பு கல்வியாண்டில் (2013-14), 925.01 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 5.50 லட்சம் மாணவர்கள் பயனாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டுக்கான லேப்-டாப் வினியோகம் இதுவரை துவங்கவில்லை; மாவட்டங்களுக்கு அனுப்பப்படவில்லை.படிக்கும்போது மாணவர்களுக்கு லேப்-டாப் வினியோகிக்கும் பட்சத்தில் மாணவர்கள்அடிப்படை தொழில்நுட்ப திறனை மேம்படுத்திக்கொண்டு

உயர்கல்விக்கு செல்ல இயலும். ஆனால், பிளஸ் 2 முடித்து சென்ற பின் மாணவர்களை தேடித்தேடி கொடுக்கும் அவலநிலையில் தலைமையாசிரியர்கள் உள்ளனர். ஒரு சில மாணவர்கள், வேறு மாநிலங்களுக்கு உயர்கல்விக்காக சென்றுவிடுவதால் கடைசி வரை லேப்-டாப் வாங்க முடியாமல் போகும் சூழல் ஏற்படுகிறது.கோவை மாவட்டத்தில் கடந்த 2012-13ம் கல்வியாண்டிற்கான லேப்-டாப் 19 ஆயிரத்து 400 மாணவர்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிற்கான லேப்-டாப் ஒரு மாணவர்களுக்கும் வினியோகிக்கப்படவில்லை. இதே நிலை அனைத்து மாவட்டங்களிலும் தொடர்கிறது.தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் வரும் கல்வியாண்டில் வழங்கவேண்டும். அதன் பின், தொடர்ந்து பிளஸ் 1 மாணவர்களுக்கு வழங்கி வந்தால், பிளஸ் 2 படிக்கும் ஓராண்டு காலம் அடிப்படை தொழில்நுட்ப திறனை பள்ளிகளிலேயே மேம்படுத்த இயலும். மேலும், பள்ளியை முடித்து செல்லும் மாணவர்களை தேடும் தலைவலி, தலைமையாசிரியர்களுக்கு இருக்காது," என்றார்.

2 comments:

  1. Student kku knowledge nalla increase akum....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி