வாக்குச்சாவடி அலுவலர்களின் பணிகள் என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2014

வாக்குச்சாவடி அலுவலர்களின் பணிகள் என்ன?


வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணி:வாக்குச்சாவடியின் மொத்தப்பணிகளுக்கும் இவரே கண்காணிப்பாளர் மற்றும் பொறுப்புமானவர்.
காவல்துறையினர், வீடியோ எடுக்கும் நபர், வாக்குச்சாவடியில் பணியாற்றும் அனைத்துஅலுவலர்களும் வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டனரா? என்பதனை உறுதி செய்யவேண்டும்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தினை கட்டுப்பாட்டு கருவியுடன் உள்ள பகுதியில் யாரும் குறுக்கே செல்லாதவாறு இணைக்க வேண்டும்.வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை சரிபார்த்து, வாக்குப்பதிவு நடைபெறுவதற்குமுன்பாக, முகவர்களுக்கு ஐயம் எழாத வண்ணம் சோதனை முறையில் விளக்கம் அளித்து, பின் அனைவரின் ஒத்திசைவுடன் தயார்நிலைப்படுத்த வேண்டும்.வாக்குப்பதிவிற்கு முன் அனைவரின் முன்னிலையிலும் மூடி முத்திரையிடப்பட்டு துவங்க வேண்டும்.வாக்குப்பதின்போது ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்களை குறுஞ்செய்தியாக உதவி தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பவேண்டும்.முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவேண்டும்.வாக்காளர்கள் ஆண், பெண் என தனித்தனி வரிசைப்படுத்தி மறைவிடத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற வாக்களிக்கும் இயந்திரப் பகுதிக்கு அனுமதிக்க வேண்டும்.வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் அனைத்துப்பொருட்களையும் விதிப்படி மூடி முத்திரையிட்டு, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் நாட்குறிப்பினை தயார்செய்து அனுப்ப வேண்டும்.

வாக்குப்பதிவு அலுவலர் (1)
வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களை அடையாளம் காண்பது அவரின் பணியாகும்.

வாக்குப்பதிவு அலுவலர் (2)
வாக்குச்சாவடி அலுவலர் (1)அனுமதித்த வாக்காளருக்கு இடது கை ஆள்காட்டி விரலில்அழியாத மையினை நகம் வரையிட வேண்டும். வாக்காளர் பதிவேட்டில் வாக்காளர் எண் மற்றும் பாகம் எழுதி வட்டமிடவேண்டும்.

வாக்குப்பதிவு அலுவலர் (2ஏ)வாக்குப்பதிவு அலுவலர் (2ஏ) நிலையில் உள்ள அலுவலர், வாக்காளரின் கையொப்பம் அல்லது பெருவிரல் ரேகைபதிவினைப் பெற்றுக்கொண்டு, வாக்காளருக்கு துண்டுச்சீட்டினை வழங்க வேண்டும்.

வாக்குப்பதிவு அலுவலர் (3)

கட்டுப்பாட்டுக் கருவிக்கு இவரே பொறுப்பாவார். இவர் வாக்காளரிடம் துண்டுச் சீட்டினை பெற்றுக்கொண்டு, வாக்காளரின் இடப்பட்ட மை அழியா மையை சரிபார்த்து வாக்குப்பதிவு பட்டனை அழுத்தி வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி