பிளஸ் 2 தோல்வி - பதிவுமூப்பு விபரம் பதிவுசெய்ய தேவையில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2014

பிளஸ் 2 தோல்வி - பதிவுமூப்பு விபரம் பதிவுசெய்ய தேவையில்லை.


பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்திருந்தால், வேலை வாய்ப்பக பதிவுமூப்பு விபரம் பதிவு செய்ய தேவையில்லை,&'&' என முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் ஆன்லைனில் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு விபரம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அவர் கூறியதாவது: மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அலைவதை தடுப்பதற்காக, பள்ளிகளிலே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு விபரங்களை பதிவுசெய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனி ஐ.டி., பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் வசதி இல்லாத பள்ளிகள், அருகில் உள்ள இன்டர்நெட் மையங்கள் மூலம் மாணவர்களின் பதிவுமூப்பை பதிவுசெய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்விஅடைந்திருந்தாலும் பதிவு செய்யலாம். ஆனால், பிளஸ்2 தேர்வில் தோல்வி அடைந்திருந்தால் பதிவு செய்ய தேவையில்லை.ஏற்கனவே பத்தாம் வகுப்பு பதிவு செய்திருந்தால், பிளஸ் 2 சான்றிதழ்களை மட்டும் பதிவு செய்தால் போதும்.

பதிவு செய்யாவிட்டால், பத்தாம் வகுப்பை சான்றிதழ்களையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும். பள்ளிகளில் பதிவு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீனியாட்டிதான் வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி