தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2014

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்.


தனியார் பள்ளிக்கு நிகராக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அட்மிஷன தீவிரப்படுத்தியுள்ளனர்.
நவீன வசதி, புதிய வடிவில் கல்வி வழங்குதல், இதர திறன் வளர்த்தல் மூலம் தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகரிப்பு மற்றும் அரசு பள்ளிகளிலும் தரமான, இலவச கல்வி வழங்கும் நடவடிக்கையால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.தனியார் பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளில், குறிப்பிட்ட சதவீதத்தினர் நடுநிலை கல்விக்குப்பின் அரசு பள்ளிகளை நாடுகின்றனர். தற்போது அரசு பள்ளிகளில்,தமிழக அரசு சார்பில் இலவச சீருடை, செருப்பு, புத்தகம், நோட்டுகள், காம்பஸ் பாக்ஸ், பேக் உட்பட 14 இலவச பொருட்கள் வழங்குவதால், மாணவர்கள் ஊக்கம் பெறுகின்றனர்.

எம்.எல்.ஏ., எம்.பி., தொகுதி நிதி, தனியார் நிதியுதவி பெற்று பள்ளி கட்டிடங்கள், நவீன வசதியுடன் கழிப்பிடம், குடிநீர் வசதி போன்றவைகளை அரசு பள்ளிகள் பெற்றுக்கொள்வதால், சுகாதார ரீதியான அச்சம் பெற்றோர் மத்தியில் குறைந்தது.தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் துவக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்தது. ஆண்டுதோறும் அதிகரிக்க வேண்டிய, முதல் வகுப்பு சேர்க்கை குறைந்து கொண்டே சென்றதற்கான முக்கிய காரணம் துவக்க நர்சரி பள்ளியில், தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என கூலி வேலைக்கு செல்பவர்கள் நினைத்ததே.இதில் கட்டணம் செலுத்த வழியில்லாதவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தனர். இதையடுத்து, தமிழக அரசு வாய்மொழி உத்தரவாக, அனைத்து அரசுபள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வியை துவக்க உத்தரவிட்டது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 4.14 லட்சம் மாணவ, மாணவியர்களில் 93 ஆயிரம் பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். நடப்பு 2014-15 கல்வியாண்டில், தனியார் பள்ளிக்கு நிகராக, அரசு பள்ளிகள் அட்மிஷனுக்கு மும்முரம் காட்டி வருகிறது.

கட்டாய கல்வி சட்டத்தின் படி, அனைத்து அரசு பள்ளிகளிலும் அட்மிஷன் தீவிரமடைந்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை வலியுறுத்தி அட்மிஷனை தீவிரப்படுத்தியுள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி