பிஎட் கல்லூரி வேலை நாட்களை உயர்த்த திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2014

பிஎட் கல்லூரி வேலை நாட்களை உயர்த்த திட்டம்.


பிஎட் கல்லூரி வேலை நாட்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வி குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில் ‘கணிணி யுகத்திற்கு அப்பாற்பட்டு படைப்பாற்றல் மிக்க சமுதாயத்திற்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான புதுமைகளை படைத்தல்‘ என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கத்தின் தொடக்க விழா சென்னை லயோலா கல்லூரியில் நேற்று தொடங்கியது. விழாவில், தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் ஹேமந்த் குமார் சின்ஹா, தேசிய ஆசிரியர் கல்வி குழு தலை வர் சந்தோஷ் பாண்டா, துணை வேந்தர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கம் வரும் 21ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கம் கணினியுகத்திற்கு அப்பாற்பட்டு ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பயிற்சி மாணவர்களிடைய புதிய கருத்துக்களை மலர செய்து மற்றும் தொழில் திறமையை உருவாக்குவதற்கான படைப்பாற்றலை மேம்படுத்துவது ஆகும். இக்கருத்தரங்கில், கல்விசார் கணினி திறன்கள், பின்னோக்கு மரபுசார் கற்றல் என ஏழு தலைப்புகளில் அமர்வு நடக்கிறது.இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அமெரிக்கா, இங்கி லாந்து, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.கருத்தங்கில் தேசிய ஆசிரியர் கல்வி குழு தலைவர் சந்தோஷ் பாண்டா பேசியதாவது: தேசிய ஆசிரியர் கல்வி குழு, ஊழலற்ற, வெளிப்படையான ஒரு நிர்வாகமாக சீரமைக்கப்படவுள்ளது.

புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் போது அது குறித்து இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிடப்படும். பிஎஸ்சி படிப்பவர்கள் 3 வருடம் அப்பிரிவையும், பின்னர் பிஎட் 2 வருடம் என 5 வருடம் படிக்க வேண்டியுள்ளது. தற்போது புதிதாக பிஎஸ்சி 3 வருடம் முடித்த பின்னர், பிஎட் 1 வருடம் என 4 வருட படிப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதேபோல, பிஎட் கல்லூரிகளில் வருடத்திற்கு 180 வேலை நாட்கள் உள்ளன. இதனை 220 வேலை நாட்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள பிஎட் கல்லூரிகளை தொடர்ந்து கண்காணிப்பதுடன், இந்தியாவில் உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் கல்வி கல்லூரிகளும் கண்காணிக்கப்படும்.தேசிய ஆசிரியர் கல்வி குழு, தேசிய கண்காணிப்பு வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

அதன்படி, அவர்களால் கண்காணிக்கப்பட்டு தர சான்றிதழ் தரப்படும் புதிய கல்லூரிகளுக்கே கல்லூரி நடத்த அனுமதி தரப்படும். கல்லூரிகளில் பிஎச்டி முடித்துவிட்டு ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், ஆசிரியர்கல்வி கற்றால் தான் ஆசிரியராக செயல்பட வேண்டும் என்ற நிலையை கொண்டுவர வேண்டும் என்று யுஜிசியிடம் பரிந்துரைத்துள்ளோம். அவர்களும் பரிசீலினை செய்து வருகிறார்கள். கல்லூரிகளில் செல்பேன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கற்றல் மற்றும் கற்பித்தல் போன்றவற்றிற்கு செல்போன பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி