ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்ப விற்பனை 25ம் தேதி வரை நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்ப விற்பனை 25ம் தேதி வரை நீட்டிப்பு.


புதுச்சேரி:ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் டி.இ.இ. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசு கல்வித்துறையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2014-15ம் கல்வியாண்டிற்கான இரண்டாண்டுகள் ஆசிரியர் பட்டயப் படிப்புச் (டி.இ.இ.) சேர்க்கைக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 21ம் தேதி முதல் 13.6.2014ம் தேதி வரை பெறப்பட்டு வந்தது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான நகல் சான்றிதழ்களுடன் லாஸ்பேட்டை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சமப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 25ம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பட்டயப்படிப்பில் சேர விரும்புவோர் மேல்நிலைப்பள்ளித் தேர்வில் அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருத்தல்வேண்டும்.எனினும், அட்டவணை இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருத்தல்வேண்டும். சேர்க்கைக்கான அதிகபட்சமாக 29 வயது இருத்தல் வேண்டும்.

அட்டவணை இனத்தவருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. விண்ணப்பம்பெற 100 ரூபாயும், அட்டவணை இனத்தவருக்கு 50 ரூபாயும் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி