இடைநிலை ஆசிரியர்கள் இடம்மாறுவதில் சிக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2014

இடைநிலை ஆசிரியர்கள் இடம்மாறுவதில் சிக்கல்.


அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால்,இடைநிலை ஆசிரியர்கள் இடம்மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6 முதல் 8 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.அரசு உத்தரவுப்படி, 2003க்கு பின், இடைநிலை ஆசிரியர் ஓய்வு பெற்ற பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்கள்நியமிக்கப்படுகின்றனர். இதனால், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாகமாற்றப்பட்டு உள்ளன.இந்நிலையில், ஜூன் 27 ல் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள இடைநிலைஆசிரியர்களுக்கு,மாவட்டத்திற்குள் மாறுதலும்; ஜூன் 28 ல் வெளிமாவட்டத்திற்கான மாறுதலும் நடக்க உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர் ஆவதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 28ல் நடக்கிறது. பதவி உயர்வுக்கு முன், இடமாறுதல் கலந்தாய்வு நடப்பதால், இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஏற்படாது.

ஆசிரியர்கள் கூறுகை யில்,'பட்டதாரி பதவி உயர்வுக்கு பின்பே காலிப்பணியிடங்கள் ஏற்படும். பதவி உயர்வுக்கு முன் இடமாறுதல்கலந்தாய்வு நடப்பதால், காலிப்பணியிடங்கள் ஏற்படாது' என்றனர்.

2 comments:

  1. June 10 to 13. Counseling ல் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்ற விபரம் யாரேனும் அறிவீர்களா? அதனால் ஏதேனும் பயன் இருந்ததா TRB க்கு.

    ReplyDelete
  2. tet pass ex servicemen quota canditaes plz contact this no 9942424565

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி