மாணவர்கள் பாதுகாப்பு; ஆசிரியர்களுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2014

மாணவர்கள் பாதுகாப்பு; ஆசிரியர்களுக்கு உத்தரவு


அரசு பள்ளிகளில், மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை, கண்டிப் பாக பின்பற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை சார்பில், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

மாணவ, மாணவியர் நலன் கருதி பள்ளிகளில், பாதுகாப்பு முறைகளை, பின்பற்ற வேண்டும்.

பள்ளி வளாகங்களில் திறந்தவெளி கிணறு, நீர்த்தேக்க பள்ளங்கள் மற்றும் தரை மட்ட நீர்தொட்டிகள் ஆகியவற்றை மூட வேண்டும்.நீர் நிரம்பிய தொட்டிகள் உள்ள பகுதிகளுக்கு, குழந்தைகள் செல்வதை அனுமதிக்க கூடாது. அருகில் உள்ள குளங்கள், ஆறு, கால்வாய் போன்ற நீர்நிலை பகுதிகளுக்கு செல்லாமல், குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

பள்ளியில் உள்ள மின் சாதன பொருட்களை, மாணவர்களை இயக்க அனுமதிக்க கூடாது.மாலையில், வகுப்பு முடிந்த பின், வகுப்பறைகளை பூட்டுவதற்கு முன் மாணவர் யாரும் இல்லை, என்பதை உறுதிபடுத்திய பின்பே கதவுகளை பூட்ட, பள்ளி ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
தேவையான மருந்து பொருட்களுடன் முதலுதவி பெட்டி கட்டாயம் இருக்க வேண்டும். அதில், காலாவதியான மருந்து பொருட்கள் இருக்க கூடாது.பள்ளிகளில், தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு கருவிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். எக்கார ணத்தை முன்னிட்டும், மாணவர் பாதுகாப்பு நடவடிக்கைகளில், தலைமை ஆசிரியர்கள் அலட்சியம் காட்டக்கூடாது. இதுகுறித்து, சக ஆசிரியர்களுக்கும் விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி