கலந்தாய்வு , பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு குறித்து சில வாய்மொழித் தகவல்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

கலந்தாய்வு , பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு குறித்து சில வாய்மொழித் தகவல்கள்.


பணி நிரவல் :

பணி நிரவலை பொருத்தவரை இம்முறை தொடக்கக்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆகிய இரு துறைகளிலும் நடைபெறுகிறது.

பள்ளிக்கல்வி துறை பணி நிரவலை பொறுத்த வரை, இயன்ற வரை மாவட்டத்திற்குள்ளே நிரவலை செய்ய அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கப்பள்ளித்துறை இடைநிலை ஆசிரியர் பணி நிரவலை பொறுத்த வரை, ஆங்கில வழிக்கல்வி துவக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் இக்கல்வியாண்டில் 2014-15 மாணவர் சேர்க்கை மற்றும் எண்ணிக்கை, மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்திற்கு போதுமானதாக இருந்தால் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் மூலமாக விண்ணப்பம் அளித்தால் பணி நிரவல் தவிர்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. (குறிப்பாக 1.10.13ப்படியே பணி நிரவல் நடைபெறுகிறது.)தொடக்கப்பள்ளித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்க பணி நிரவல் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவி உயர்வு :

பதவி உயர்வு ஏற்கனவே நாம் வெளியிட்ட கருத்தின்படி 1.1.2013 முன்னுரிமை பட்டியலும் அதற்கு பின்பு 1.1.2014 முன்னுரிமை பட்டியலும் பின்பற்றப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.2009 முதல் நியமிக்கப்பட்ட மாநில அளவிலான பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் இவ்வாண்டு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலில் உறுதியாக கலந்துக்கொள்ளலாம்.

மேற்காணும் தகவல்கள் அலுவலர்கள் மற்றும் ஆசிரிய கூட்டணி பொறுப்பாளர்கள் மூலம் அளிக்கப்பட்டது. ஆயினும் மேற்காணும் தகவலை உறுதி படுத்தும் வகையில் கல்வித் துறை இயக்கங்கள் செயல்முறை மூலம் உறுதிப்படுத்தாமையால், உறுதிப்படுத்தப்பட்டவுடன் முழுத்தகவலும் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி