அலுவலகம் துவங்கி 15 நிமிடங்களுக்குள் வரவில்லை என்றால் சம்பளம் கட்: வெங்கையா நாயுடு ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2014

அலுவலகம் துவங்கி 15 நிமிடங்களுக்குள் வரவில்லை என்றால் சம்பளம் கட்: வெங்கையா நாயுடு ஆணை


நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று (28.07.2014) தன் அமைச்சக அலுவலகத்தில், திடீரென சோதனை மேற்கொண்டார்.
காலை 9.10 மணிக்கு திடீரென ஆய்வில் ஈடுபட்டார். ஒவ்வொரு அறையாக சென்று ஒரு மணி நேரம் ஆய்வில் ஈடுபட்டார். அதில், 80 ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராததை கண்டுபிடித்தார். அவர்களின் பெயரைக் குறித்து கொண்டதுடன், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அலுவலகத்திற்கு தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன அல்லது இருக்கையில் இல்லாமல் போனதற்கான காரணம் என்ன என்பது குறித்து, அவர்களிடம் விளக்கம் கேட்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் தன் கட்டுப்பாட்டில் உள்ள, நகர்ப்புற மேம்பாடு மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சகங்களில், பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை, உடனே அமல்படுத்தும்படியும் தெரிவித்தார். மேலும், அலுவலகத்திற்குயார் யார் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகின்றனர்; யார் வருவதில்லை என்பதை, அவ்வப்போது, உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அலுவலகம் துவங்கி, 15 நிமிடங்களுக்குள் வராதவர்களை, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது. தாமதமாக வருபவர்களை, பணிக்கு வரவில்லை என, கணக்கிட்டு, சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும்' என்றும் ஆணையிட்டார்.

சில வாரங்களுக்கு முன், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ்ஜாவடேகரும், இதேபோல், தன் அமைச்சகத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில், திடீர்சோதனை மேற்கொண்ட போது, 40க்கும் மேற்பட்டோர், சரியான நேரத்திற்கு பணிக்கு வராமல் இருந்ததை கண்டார். உடன், அவர்களுக்கு தற்காலிக விடுமுறை கொடுக்கும்படி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி