பிளஸ் 2 உடனடி தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2014

பிளஸ் 2 உடனடி தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.


"பிளஸ் 2 உடனடித்தேர்வு எழுதியோர், விடைத்தாள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்,”என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு: ஜூன், ஜூலையில் பிளஸ் 2 உடனடி தேர்வெழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்தவர்கள் student.hse14rtrv.in என்ற இணையதளத்தில், தங்களின் பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரியவிடைத்தாள்களின் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதன்பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் Applicationfor Retotalling / Revaluation என்ற தலைப்பை 'கிளிக்' செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். அதை பூர்த்தி செய்து, இருநகல்கள் எடுத்து, நாளை (ஜூலை 30) காலை 10:00 மணி முதல் ஆக., 4 பகல் 1:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதற்கான கட்டணத்தை அங்கேயே பணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி