ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்.


ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடுதொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பணிநிறைவு செய்த தலைமை ஆசிரியர் கோ.சர்வரட்சகனுக்கு பாராட்டு விழா அதன் ஒன்றியத் தலைவர் (பொறுப்பு) விஜயராகவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.ஆசிரியர் தகுதித் தேர்வினால் கல்வித் தரம் உயராது. எனவே, படித்த இளைஞர்கள் முறையாக அரசு வேலைக்கு செல்ல ஏதுவாக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும்.ஆசிரியர் கலந்தாய்வு, இடமாறுதல்களை நேர்மையான வகையில் வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான தர நிர்ணய ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் லா.தியோடர் ராபின்சன், பொதுச்செயலர் க.மீனாட்சி சுந்தரம், ஒன்றியச் செயலர் ஆ.திருநாவுக்கரசு, பொருளர் க.கவியரசன், துணைச் செயலர் எஸ்.அருண்குமார், மாவட்டத் தலைவர் சா.வீரமணி, மாவட்டச் செயலர் கு.ராசராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

7 comments:

  1. appadi tet cancel pannina nearly 74000 vaccency fill pannitu cancell pannunga

    ReplyDelete
  2. கூட்டம் கூட்டுவதற்க்கு வேறு காரணங்கள் கிடைக்கவில்லையா??? தீர்மானங்கள் நிறைவேற்றி????????????.

    ReplyDelete
  3. ஆதித்யா சேனலில் சொல்லுஙக அண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியில் பார்த்தால்...போதும் . மாணவ, மாணவிகளின் .. ஏன் சில ஆசிரியர்களின் கல்வித் தகுதி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பார்க்க கவலையாக இருக்கிறது.. எனவே ஆசிரியர்களின் கல்வித் தகுதி அவசியம் தேவை.தேவை தேவை தேவை...!

    ReplyDelete
  4. TNTET – ன் தற்போதைய குளறுபடி: HEART BREAKING NEWS

    .05 இலவச வெயிட்டேஜ் மதிப்பெண்கள்

    (ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

    அரசாணைக்கு எதிராக வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
    மதிப்பெண் சதவீதத்தை வெயிட்டேஜ் மதிப்பெண்களாக மாற்றும்பொழுது எவ்வளவு மதிப்பெண் வருகிறதோ அதைத்தான் மதிப்பிட வேண்டும் , முழுமையான எண்ணாக மாற்றக்கூடாது , ஆனால் TRB பயன்படுத்தியுள்ள மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது. எடுத்துக்காட்டாக PLUS TWO மதிப்பெண் 45.17 யை 45.2 ஆகக் கணக்கிடுகின்றது.......இதாவது பரவாயில்லை 49.25 யை 49.3 ஆகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !)

    மேலும் TNTET தேர்வில் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 35.59 ( 89 * .6 = 35.59) மட்டுமே வழங்கப்படவேண்டும் ஆனால் 35.6 ஆகக் கணக்கிடுகின்றது. .01 மதிப்பெண் வித்தியாசம் உங்கள் வாழ்கையை மாற்றிவிடும்.

    மருத்துவ , பொறியியல், B.Ed கலந்தாய்வு மற்றும் அனைத்து அரசுப் பணிகளிலும் நாம் பெற்ற மதிப்பெண்கள்கள் மட்டுமே கணக்கிடப்படுகின்றது.. எங்குமே புள்ளிக்குப் பிறகு 5 அல்லது அதற்கு மேல் மதிப்பு வந்தால் ஒரு என்னைக் கூட்டிக் கொள்வது வழக்கம் அல்ல.

    பின்குறிப்பு : ஆதாரங்களை இணைத்துள்ளேன். நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
    https://www.facebook.com/nirainilaa/posts/1426617317626675

    ReplyDelete
  5. பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்தால் கல்விதரம் உயர்ந்து விடுமா?

    ReplyDelete
  6. apo youth laaam keladu aana piragu thaan job kidaikum athum doubt agirum.... tet thevai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி