மூன்றாண்டு முடிவதால் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2014

மூன்றாண்டு முடிவதால் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்.


தமிழகத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆவதால், இந்த கல்விஆண்டில் 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்க கட்டண கமிட்டி முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில் 2010ம் ஆண்டில் கட்டண குழுவை அரசு அமைத்தது. அதற்கு பிறகு இரண்டு முறை கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சுமார் 800 பள்ளிகள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அந்த பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் விசாரணை தற்போது நடக்கிறது. இந்த ஆண்டு மட்டும் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 15 பள்ளிகள் மீது புகார் வந்தது. அதன்பேரில் 10 பள்ளிகள் மீது விசாரணை நடத்தப்பட்டது. சென்னை பெரம்பூரை சேர்ந்த நிதியுதவி பெறும் பள்ளியில் ரூ.1 கோடியே 62 லட்சம் கூடுதலாக கட்டணம் பெற்றது நிரூபணம் ஆனதால், அந்த தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று கட்டண கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, 2015ம் ஆண்டுடன் கால அவகாசம் முடியும் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இது குறித்து கட்டண கமிட்டியின் தலைவர் நீதிபதி சிங்காரவேலு கூறியதாவது: ஏற்கனவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகள் அந்த கட்டணத்தில் திருப்தி இல்லை என்று நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அதில் 520 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டியுள்ளது.

புதியதாக கண்டறியப்பட்டுள்ள 373 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு வரை முடிவடைந்த பள்ளிகள் அடுத்த 3 ஆண்டுக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டி மனு செய்துள்ளன. கட்டணம் கமிட்டி தெரிவித்தபடி கல்விக் கட்டணம், போக்குவரத்து கட்டணம், நோட்டுப்புத்தகத்துக்கான கட்டணம், சீருடைக்கான கட்டணம் தவிர வேறு கட்டணம் எதையும் பள்ளிகள் வசூலிக்க கூடாது.அப்படி வசூலிக்கும் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இன்னும் 5 பள்ளிகள்நிலுவையில் உள்ளன. தற்போது, சென்னையை அடுத்த ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் திரும்ப பெறும் டிபாசிட் என்று வசூலித்த பணத்தை கொடுக்க மறுப்பதாகபெற்றோர் புகார் தெரிவித்தனர். அதன் மீது விசாரணை நடத்தி க்ஷீ2 லட்சத்து 20 ஆயிரம் திரும்ப பெறப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு கட்டண கமிட்டி பரிந்துரை செய்யும். ஆனால், கட்டண கமிட்டியே நேரடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளோம் அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு நீதிபதி சிங்காரவேலு தெரிவித்தார்.

சிக்கலில் கன்னியாகுமரி பள்ளிகள்

தனியார் பள்ளிகள் கட்டணத்தை முறைப்படுத்த அமைக்கப்பட்ட கட்டண கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாதுஎன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் பல பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இது போல கட்டண கொள்ளை நடந்து வருகிறது. இதையடுத்து டாக்டர் ஒருவர், 13 பள்ளிகளில் நேரில் சென்று மாணவர் சேர்க்கைக்குஎவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.அந்த பள்ளி நிர்வாகிகள் தெரிவித்த அனைத்து விவரங்களையும் பென்-கேம் மூலம் படம் பிடித்து அதை ஒரு சிடியாக தயாரித்து கட்டண கமிட்டியிடம் கொடுத்துள்ளார். அதன் மீது சட்ட ரீதியான விசாரணையை கட்டண கமிட்டி தொடங்கியுள்ளது. இந்த விசாரணை தற்போது பரபரப்பாக நடக்கிறது. விசாரணை முடித்ததும் 13 பள்ளிகள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்க கமிட்டி முடிவு செய்துள்ளது.

1 comment:

  1. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,சட்டம் தன் கடமையை பார்க்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி