ஆசிரியர் தகுதிதேர்வில் மதிப்பெண் சலுகை பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் ( புதுச்சேரி செய்தி ) - தினத்தந்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

ஆசிரியர் தகுதிதேர்வில் மதிப்பெண் சலுகை பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் ( புதுச்சேரி செய்தி ) - தினத்தந்தி.

வேலையில்லாத பட்டதாரி ஆசிரியர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 2012–ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் சலுகை அளிக்கப்படவில்லை. ஆனால் 2013–ம் ஆண்டு நடந்த தேர்வில் மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு கடந்த 2012–ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்கவேண்டும்.

கட்டாய கல்வி சட்டத்தின்படி ஒன்று முதல் 8–ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். அதற்காக 2012–ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. புதுவை கல்வித்துறையில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாமல் பட்டதாரி ஆசிரியர் வேலை பதவி உயர்வு மூலம் கொடுக்க சட்டம் உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயித்தது சட்டவிரோதம். இது அரசியல் சட்டத்தை மீறிய செயல். எனவே இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து நிர்ணயித்து, தனது அரசியல் சட்ட கடமையை புதுவை அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

7 comments:

  1. நான் கிளிம்பிவிட்டேன்...நீங்கள்

    நாள் : 18.8.14 திங்கள் கிழமை
    இடம் : வள்ளுவர் கோட்டம்
                  நுங்கம்பாக்கம்

    காரணம்: பட்டதாரி ஆசிரியர்
    நியமனம் தொடர்பான உண்ணாவிரதம்

    இந்த  உண்ணாவிரதம் நடப்பதற்க்கு ஏற்பாடு செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் என்பதை நாம் மனிதல் கொள்ளவேண்டும்.

    இவ் உண்ணாவிரதத்தில் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல்  82 க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல்  ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

    மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

    Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

    உண்ணாவிரதம் மனு அளித்தல் மட்டும்மின்றி முடிந்த அளவில் வாழக்குகளை பதிவு செய்வோம். என்றென்றால் நீதிமன்ற தீர்ப்புளால்லும் இதுவரை பல மற்றாங்கள் நடந்து௫க்கின்றன.

    இவ் உண்ணாவிரதம் செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
    Msg மூலமாகவோ
    Facebook Status Sharing
    What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

    உண்ணாவிரதம் நடத்த ஏற்பாடு செய்த நண்பர்கள் இச்செய்தி அனைத்து ஊடங்களிலும் சிறப்பாக வர எற்பாடு செய்யுங்கள்.

    பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
    தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

    நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் உண்ணாவிரதத்திற்காக ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

    சென்னை வள்ளுவர்கோட்டத்தில் சந்திப்போம் வாரீர்

    ReplyDelete
    Replies
    1. Sir,
      Pls 90 ku mela edutha ellorukkum job kodukkum padi kaelunga. Seniors mattum mention panni kaekadhenga. Pls.

      Delete
  2. கேஸ் போட யாரும் போகாதீங்க பணம் பறிக்கும் வழிகளில் இதுவும் ஒரு தொழிலாக தற்போது நடைமுறையில் உள்ளது . போராட்டம் , உண்ணாவிரதம் , மனு கொடுப்போம் என்ற போன்ற பல trb office ல் , வள்ளுவர் கோட்டம், போன்று இடங்களில் ஒன்று கூடுவோம் என்ற வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் இது என் அனுபவம் . அனைவரும் விழிப்புணர்வு பெறவே இதை கூறினேன் . தவறான நோக்கத்தில் அல்ல .

    ReplyDelete
  3. உண்ணாவிரதம் வெற்றி அடைய வாழ்த்துகள் நண்பர்களே.

    ReplyDelete
  4. Y Sir tet. Posting list still nw?

    ReplyDelete

  5. கட்டாய கல்வி சட்டத்தின்படி ஒன்று முதல் 8–ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். அதற்காக 2012–ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. புதுவை கல்வித்துறையில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாமல் பட்டதாரி ஆசிரியர் வேலை பதவி உயர்வு மூலம் கொடுக்க சட்டம் உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி