டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2014

டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளில், முதல் முறையாக, டீசல் விலையை, லிட்டருக்கு, இரண்டு ரூபாய் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை, பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்பதால், தங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுவதாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வந்தன.இதையடுத்து, பெட்ரோலின் விலையை, நிர்ணயிக்கும் பொறுப்பு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களிடம் தரப்பட்டது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப, பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்களே, அவ்வப்போது நிர்ணயம் செய்கின்றன.டீசல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு, தொடர்ந்து அரசிடமே உள்ளது. மானிய விலையில், டீசல் விற்பதால் ஏற்படும் இழப்பை ஈடு செய்வதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதன் விலை, மாதம் தோறும், 50 பைசா உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், டீசல் விற்பனையால் ஏற்பட்ட நிதி இழப்பு அடியோடு குறைந்தது. இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளில், முதல் முறையாக, டீசல் விலையை, லிட்டருக்கு, இரண்டு ரூபாய் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் என, எதிர்பார்க்ப்படுகிறது.அதேநேரத்தில், பெட்ரோல் விலையையும், லிட்டருக்கு, 50 பைசா குறைக்க, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.இதற்கிடையே, 'அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதில் பயன் பெறும் விதமாக, இந்த விலை குறைப்பு அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது' என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், விலை குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவதை, மத்திய அரசு தள்ளிப் போடுவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி