இடது கையை இழந்த ஜூடோ வெற்றி வீரன் நிகிடோ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2014

இடது கையை இழந்த ஜூடோ வெற்றி வீரன் நிகிடோ!

ஜப்பானில், டொக்கியோவில் வசித்து வந்து பத்து வயது சிறுவன் நிகிடோ, கார் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தவன். ஆனால் அவனுக்கு ஜூடோவில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், ஒரு மாஸ்டரை அணுகி ஜூடோ கற்றுக் கொள்வதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அவரும், அவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டு, ஜூடோ கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். ஆனால், மூன்று மாதங்களாகியும் அவர் ஜூடோவில் ஒரே ஒரு அசைவை மட்டுமே அவனுக்க கற்றுக் கொடுத்திருந்தார்.

ஒரு நாள் நிகிடோ, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் மெதுவாக “மாஸ்டர், இந்த அசைவைத் தவிர நீங்கள் வேறு அசைவுகளை ஏன் எனக்குக் கற்று தரவில்லை.’ “நீ இந்த ஒரு அசைவை மட்டும் தினமும் பயிற்சி செய்து வா, போதும். வேறு எதுவும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்று ஆசிரியர் பதிலளித்தார்.

ஒன்றும் புரியாத சிறுவன் நிகிடோ, ஆசிரியரிடம் நம்பிக்கை வைத்து, அந்த ஒரு அசைவை மட்டுமே தினமும் தீவிரமாக பயிற்சி செய்து வந்தான். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின், மாஸ்டர் அவனது முதல் பந்தயத் தொடருக்கு நிகிடோவை அழைத்துச் சென்றார். வியப்பூட்டும் விதமாக, முதல் இரண்டு போட்டிகளிலும் நிகிடோ மிக எளிதாக வெற்றி பெற்றான். 

மூன்றாவது போட்டி சற்றே கடினமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு நிகோடோவின் ஒரே மாதிரியான ஜூடோ அசைவால் பொறுமையிழந்த எதிர்தரப்பு வீரர், அவனை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார். ஆனால் நிகிடோவோ, தனக்குத் தெரிந்த அந்த ஒரே ஒரு அசைவை மட்டுமே உபயோகித்து அவரை எளிதாகத் தோற்கடித்தான். தனது வெற்றியை நம்ப இயலாத நிகிடோ, இறுதிப் போட்டிக்குத் தயரானான்.

இம்முறை அவருடன் ஜூடோ சண்டை போட இருந்தவர், உருவத்தில் பெரிவராகவும், வலிமையானவராகவும், அதிக அனுபவமுள்ளவராகவும் தோன்றினார். சிறிது நேர சண்டைக்குப் பின், நிகிடோ சோர்வுற்றதை கவனித்த நடுவர், அவனுக்கு அடிபட்டு விடப் போகிறதே என்ற கவலையில், சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்த முடிவு செய்தார்.

“வேண்டாம், அவன் தொடர்ந்த சண்டை போடட்டும்; ஒன்றும் ஆகாது’ என்று நிகிடோவின் மாஸ்டர் உறுதியாகக் கூறினார். போட்டி மீண்டும் துவங்கியபோதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நிகிடோவுக்கு எதிராக விளையாடியவர், கையில்லாத சிறுவன்தானே, என்ன பெரிதாக செய்து விடப் போகிறான் என்று சற்றே அலட்சியமாகிவிட, நிகிடோ அத்தருணத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தனக்குத் தெரிந்த அந்த ஒரே அசைவால் அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்தான். பிறகென்ன, நிகிடோ அப்போட்டியை மட்டுமல்லாமல், அத்தொடரையே கைப்பற்றி, வெற்றிவீரனானான்.

வீடு திரும்பும் வழியில், இறுதிப் போட்டி வரை அவனுக்கு எதிராக விளையாடியவர்களின் பல்வேறு அசைவுகளைப் பற்றி நிகிடோவின் மாஸ்டர், அவனுக்கு விளக்கிக் கொண்டே வந்தார். மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட நிகிடோ, அவரிடம் கேட்டான்: “மாஸ்டர் ஒரே ஓர் அசைவை மட்டுமே வைத்துக் கொண்டு என்னால் எதிராளியை எப்படி எளிதில் வீழ்த்த முடிந்தது?’

“உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஜூடோவின் மிகக் கடினமான அசைவை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து, நீ அதில் மிகவும் தேர்ந்து விட்டாய். இரண்டாவதாக உனது அசைவை எதிர்கொள்ள, உனது கையைப் பிடித்துத் தடுப்பதுதானா ஜூடோவிலே உள்ள ஒரே ஒரு பாதுகாப்பு இயக்கம். உனக்கு இடது கை இல்லாததால், எதிராளிகளுக்கு அதை செய்ய முடியாமல் போனது. எனவே உனது பலவீனத்தால் தான் உன்னால் எளிதாக வெற்றி பெற முடிந்தது’ அதாவது நிகிடோவின் மிகப்பெரும் பலவீனம் அவனுக்கு மிகப்பெரும் பலமாக மாறி, அவனை வெற்றி பெறச் செய்தது.

சில நேரங்களில் நம்மிடம் சில பலவீனங்கள் உள்ளதாக நினைத்துக் கொண்டு, சூழ்நிலைகளையும், பிறரையும், அதிஷ்டத்தையும், ஏன், நம்மையுமே கூட குறை கூறிக் கொள்கிறோம்; ஆனால் ஒரு நாள் நமது பலவீனமே நமக்கு பலமாக மாறக்கூடும் என்பதை நாம் அறிந்திருப்பதில்லை.
நாம் ஒவ்வொருவருமே விசேஷமானவர்கள் மற்றும் முக்கியமானவர்கள்தான். எனவே, நமக்கு பலவீனங்கள் இருப்பதாக நினைக்காமல், நம்மை நாமே தாழ்வானவர்களாகவோ, உயர்ந்தவர்களாகவோ நினைத்தக் கொள்ளாமல், நமக்கு இறைவன் தந்த வாழ்க்கை என்ற வரத்தை முழுவதுமாக உபயோகித்து, அதில் நம்மால் முடிந்த அளவு வெற்றி பெற முயற்சிப்போமாக!


-ஆர். ஸ்ரீமதி நவிச்சந்தர்

12 comments:

  1. Replies
    1. @@@@@@@@@@@@@@
      கூடுதல் பணியிடம் பெறுதல் தொடர்பாக
      @@@@@@ௐ@@@@@@@

      இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள்:

      நமக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போனதுக்கு முழுமுதற்காரணம் TRB அறிவித்த குறைவான காலிப்பணியிட அறிவிப்பே என்பதை உணர வேண்டும்.


      தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைவான காலிப்பணியிட அறிவிப்பால் நாம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      விழுமின்;
      எழுமின்;
      உழைமின் ;
      கருதிய காரியம் கை கூடும் வரை-விவேகானந்தர்.

      என்பதன் விளக்கத்தை நம் மாணவர்களுக்கு கற்பிக்க தொடங்கும் முன் நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டிய தருனம் இதுவே.

      வெற்றி என்பது நிச்சயம் உண்டு.ஆனால் அதற்கு ஆகும் கால நேரமும், சந்தர்ப்பமும் நம் முயற்சிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
      கடந்த நமது முயற்சி தோல்வியே தோல்வியே தழுவியதற்கான காரணம் உங்களின் முழு பங்களிப்பின்மையே, என்று கூற கடமைப்படுகிறோம்..

      குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது சென்னையில் ஒன்றினைய வேண்டும். நம் ஒவ்வொருவரும் நாம் வேதனைகளையும், நமது கோரிக்கைகளையும் குறைந்தபட்சம் 5 நிமிடத்தில் DIGITAL CAMERA மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவை DVD cassettes ஆக மாற்றி, இத்துடன் இடைநிலை ஆசிரியர்களின் 15 பக்க கோரிக்கை மனுவையும் இணைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அதிகாரி அவர்களுக்கும், 38 மந்திரிகளுக்கும்,ஆசிரியர் தேர்வு வாரிய நிர்வாக தலைவர் அவர்களுக்கும், சில மீடியாவிற்கும் பதிவுத்தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

      ஒரு மீடியா நிறுவனம் நமது பதிவுகளை ஒரு வார கால அவகாசத்தில் ஒளிபரப்பு செய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளது.


      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.


      ஆதலால் காலம்தாழ்த்தாமல் வருகின்ற ஞாயிறு (21.09.14)அன்று, அனைவரும் சென்னை மெரினாவில் ஒன்றுகூட வேண்டும்.

      குறைந்தது 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான
      SOURCES உண்டு.அவை நமது கோரிக்கை மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

      தயக்கம் வேண்டாம்.நாம் அனைவரும் சென்னையில் ஒனறிணைவோம்.

      *********WE (SGT)DEMAND ONLY ADDITIONAL VACCANCY******************

      10,000 காலிபணியிடம் அதிகரித்தால் நமக்கும் பணிவாய்ப்பு கிடைக்கும் என நம்பும் OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
      ******************************
      தொடர்புக்கு
      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy (erode)
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100



      ####################
      Date :21/09/14
      Place : chennai merina.

      ******************************
      Thanks to all.
      ******************************

      Delete
  2. இது போல உண்மை கதைகளை கொண்ட தொகுப்பு நமது பள்ளி பாட திட்டங்களில் இடம்பெறவேண்டும். இதை இங்கு பிரசுரம் செய்தவருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. படிப்பதற்கு அருகில் பள்ளிக்கூடம் இல்லாமலும், உயர் நிறுவனங்களில் படிக்க வைக்க பணவசதி இல்லாமலும், தொழிட்நுட்ப வசதி இல்லாத அன்றைய காலகாட்ட்த்திலும், பஞ்சம் பட்டினியோடு இருந்தாலும் படிப்பு ஒன்றே மூலதனம் என பள்ளிக்கூடம் சென்ற தலைமுறையின் முதல் பட்டதாரி ஆசிரியரின் கனவை ஆழமான குழி தோண்டி புதைக்க வந்துவிட்டான் எமன் உருவில் ஜி.ஓ 71....

    62,500 குடும்பங்களையும் இனிவரும் ஒவ்வொரு ஆசிரியரின் குடும்பங்களையும் காட்டுமிராண்டித்தனமாக காவு வாங்கிவிட்டது ஜி.ஓ 71....

    இந்த அரசாணை அப்பாவிகளின் உயிரை குடித்துவிடும் என எண்ணியிருந்தால் அரசு அன்றே அரசணை 71ஐ அமல்படுத்தி இருக்காது....



    மக்களின் நலனுக்காக ஆட்சி அதிகாரம் பெற்ற அரசாலும் அரசின் உயர்மட்ட அமைச்சர்களாலும் உருவாக்கப்படுவதே அரசாணை ஆகும்...

    ஆகவே அரசாணை என்பது மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுகிறது, மதிக்கப்பட வேண்டும்...

    அதை விட முக்கியமானது அரசாணையால் ஒரு அப்பாவி கூட பாதிக்கப்பட கூடாது இதுதானே நியாயம்!, இதுதானே சமூகநீதி!!...

    அரசாணை 71ஆல் பாதிக்கப்பட்டோம் என ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தையும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடுரோட்டிலும் இறங்கி போராடினார்கள் அதன் உள் விளைவை அறிந்து நீதியரசர் திரு சசிதரன் அவர்கள் தடைஆணை பிறப்பித்தார்கள்...



    இதற்கிடையில் போராட்டக்குழு அரசின் அனைத்து உயர்மட்டக் குழுவிடமும் கோரிக்கை மனு அளித்து இருக்கின்றனர்...

    அரசானை 71ன் பாதிப்பை அனைத்து மக்களும் புரிந்து விட்டனர்..தற்போது நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் முடிந்து இறுதி தீர்ப்புக்கு காத்துக்கொண்டு இருக்கிறோம்..

    அரசால் இயற்றப்படும் அரசாணை( Government Order) பெரிதா???

    அரசை உருவாக்கும் மக்களால் இயற்றப்பfஉம் மக்கள் ஆணை(Makkal Order) பெரிதா???

    உங்களின் சுவராஸ்யமான பின்னூட்டங்களை தெரிவியுங்கள், இறுதியில் முடிவை சொல்லுகிறேன்..

    By
    P.Rajalingam Puliangudi ...
    http://tnteachersnews.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. Rajalingam sir good even

      Delete
    2. ஏனுங் பெரியவரே
      எப்பிடிப் பாத்தாலும் 62000 பேருக்கு வேல இல்ல அது ஒன்னு
      இன்னொன்னு
      நமக்கு சாதகம்னா அது நீதி
      இல்லன்னா அது அநீதி
      ஆனா இந்த மாதிரி வேல
      செய்ரவங்க இப்பிடித்ததான் பேசோனும்
      நீங்க ஒரு நல்ல அரசியல்வாதி
      அப்புறம் ஜியோ பெரிசா எம்ஓ
      பெரிசான்னு கேட்டிருக்கீங்க
      அத மொதல்ல நீங்க நலலா புரிஞ்சா சரி
      வரனுங் பெரியவரே டென்சனாயி எதிர்கட்சிகிட்ட மாட்டி விட்றாதீங்க

      Delete
  4. லிங்கா..
    உங்க சினிமா கொட்டகையில் ஓடுற படத்துக்கு நம்ம தியேட்டர்ல போஸ்டர் ஒட்றீங்க,
    அங்க கூட்டமில்லையோ. டிக்கெட்டே இல்லன்னாலும் அங்க வரமாட்டோம்.

    ReplyDelete
  5. Namb entha rutla ponalum getea potraanukale ? Hmmmm.....namba vantiya otta mutiyalaye enna pantrathu . Ennn aaatttuuutttha eeelakku nayanthara ohh sorry tet il 150 questions ketpathal yosithu elutha mutiyavellai 1988_2014 akave nangal pathippataikiroom..............? ! Eepputi

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி