தேசப்பிதாவுக்கு கோயில் கட்டி தெய்வமாக வணங்கும் கிராமம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2014

தேசப்பிதாவுக்கு கோயில் கட்டி தெய்வமாக வணங்கும் கிராமம்



கம்பம் அருகே கிராம மக்கள், தேசப்பிதா மகாத்மா காந்திக்கு ஆலயம் கட்டி கட்டி அன்றாடம் வழிபட்டு வருகின்றனர்.
அடிமைப்பட்டிருந்த இந்திய மனிதர்களுக்கு ‘சுதந்திரத்தை’ சுவாசிக்கச் செய்த அற்புத மாமனிதர் காந்தி மகான். இந்த அகிம்சைப் போராளிக்கு தங்கள் விசுவாச அடையாளமாக ஒரு கிராமமே கோயில் கட்டி கும்பிட்டு வருகிறது.

தேனி மாவட்டம், கம்பம் அருகில் இருக்கிறது காமயகவுண்டன்பட்டி. சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தை தக்க வைத்திருக்கும் பெருமைக்குரிய இக்கிராமத்தில்தான் இந்த ‘காந்தி கோயில்’ இருக்கிறது.நாடு முழுக்க அன்றைக்கு நடந்த விடுதலை வேள்வித்தீயில் இந்த காமயகவுண்டன்பட்டி கிராமத்தினரும் பங்கெடுத்து பாடுபட்டனர். இக்கிராமத்தின் பரமசிவத்தேவர், முன்னாள் எம்பி சக்திவடிவேல் கவுடர், முன்னாள் எம்எல்ஏ பாண்டியராஜ், கிருஷ்ணசாமி கவுடர், சாமாண்டி ஆசாரி, குந்திலிராமசாமி நாயக்கர், வீராச்சாமி நாயுடு, சுப்பிரமணியபிள்ளை, சுருளியாண்டி ஆசாரி உள்ளிட்ட 80க்கும் அதிக தியாகிகள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.இந்த ஊர் முழுக்க வலம் வந்து கேட்டால், ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்வு நிகழ்வுகளும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.நாடு விடுதலைக்கென போராடிய இக்கிராமத்து தியாகிகளைப் போற்றும் விதம், தேசத்திற்கு விடுதலை தந்த காந்தியடிகளுக்காக ஒரு கோயில் கட்டி, இங்கு காந்தியடிகளின் திருவுருவச் சிலை அமைக்க முடிவானது.

இதன்படி 1985ம் ஆண்டுகாமயகவுண்டன்பட்டி கிராமமே கூடி முன்னாள் எம்எல்ஏ பாண்டியராஜ் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைத்தது.அனைத்து சமுதாய மக்கள் ஒத்துழைப்புடன், ஆறே மாதங்களில் இந்த காந்தி கோயில் கட்டப்பட்டு, மகாத்மா காந்திக்கு வெண்கலச்சிலை நிறுவப்பட்டது. இந்த காந்தி கோயிலை, அன்றைய துணை ஜனாதிபதி வெங்கட்ராமன் 1985, டிச. 29ல் திறந்து வைத்தார்.தேனி மாவட்டம் காமயக்கவுண்டன்பட்டியில் பொதுமக்கள் கட்டியுள்ள மகாத்மா காந்தி ஆலயம். உள்படம்: ஆலயத்திற்குள் உள்ள காந்திஜியின் முழு உருவ வெண்கலச் சிலை.நாடு விடுதலைக்கென போராடிய இக்கிராமத்து தியாகிகளைப் போற்றும் விதம், தேசத்திற்கு விடுதலை தந்த காந்தியடிகளுக்காக ஒரு கோயில் கட்டி, இங்கு காந்தியடிகளின் திருவுருவச் சிலை அமைக்க முடிவானது.இதன்படி 1985ம் ஆண்டு காமயகவுண்டன்பட்டி கிராமமே கூடி முன்னாள் எம்எல்ஏ பாண்டியராஜ் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைத்தது. அனைத்து சமுதாய மக்கள் ஒத்துழைப்புடன், ஆறே மாதங்களில் இந்த காந்தி கோயில் கட்டப்பட்டு, மகாத்மா காந்திக்கு வெண்கலச்சிலை நிறுவப்பட்டது.

இந்த காந்தி கோயிலை, அன்றைய துணை ஜனாதிபதி வெங்கட்ராமன் 1985, டிச. 29ல் திறந்து வைத்தார்.ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர, குடியரசு தினங்கள், காந்தியடிகள் பிறந்த தினம் மற்றும் தேசத்தலைவர்கள் பிறந்த தினங்களில் காந்தி கோயிலில் விழா களைகட்டுகிறது. காந்தியை தெய்வமாக கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். சுதந்திர போராட்ட காலத்தில், அர்ப்பணிப்போடு பாடுபட்ட ஊர் தியாகிகளின் படங்களும், இந்த காந்தி கோயிலில் வைக்கப்பட்டு அன்றாடம் இந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.தற்போது நிர்வாகக் குழுவினர் அனைத்து சமுதாய மக்கள் ஒத்துழைப்பில், பலரது நன்கொடையுடன் காந்தி கோயிலை புதுப்பித்துள்ளனர். கம்பம் & காமயகவுண்டன்பட்டிரோட்டில் அமைந்திருக்கிற இந்த மகாத்மா ஆலயம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை, இன்றைய இளைஞர்களுக்கு நினைவுபடுத்தும் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகிறது.

4 comments:

  1. Mahathma ji. Engalukku oru vali kaatuga

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Thanks for deleting my comment....
    you can delete this comment too....

    because it is a dictatorship....

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி