குரூப் 1 தேர்வு முறைகேடு விவகாரம்: உச்சநீதிமன்றம் புது முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2014

குரூப் 1 தேர்வு முறைகேடு விவகாரம்: உச்சநீதிமன்றம் புது முடிவு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, 83 தேர்வர்களை நிராகரித்த விவகாரத்தில்,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தை பதில் மனுதாரராக சேர்க்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வரும் ஜனவரி 22ம் தேதி விசாரணை நடைபெறும் எனவும், அன்றைய தினம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004-05ம் ஆண்டில் நடைபெற்ற, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில், 83 பேர் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்தத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, 83 தேர்வர்களையும் நீக்குவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், டி.என்.பி.எஸ்.சி.க்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதிலும், டி.என்.பி.எஸ்.சி.க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர், தேர்வர்கள் தரப்பு வாதத்தை மீண்டும் கேட்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தேர்வர்களின் விடைத்தாள்களை சரியாக ஆராயவில்லை எனக் கூறப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்தநீதிமன்றம், விடைத்தாள்களை ஆய்வு செய்ய வசதியாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தை பதில் மனுதாரராக சேர்க்க முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலை, ஜனவரி22ம் தேதிக்குள் யு.பி.எஸ்.சி. தெரிவிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 comment:

  1. vunmai yendrume jayikkum, athu kadavulukku mattume velicham , thavaru seithavargal yarage irunthalum atharkuriya thandanaiyai anubavithey aagevendum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி