முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு


முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை, நேரில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வை, வரும் ஜன., 10ம் தேதி நடத்துகிறது. இம்மாதம் 10ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், மையம் அமைத்து 50 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.திருப்பூர் முதன்மை கல்வி அலுவலக மையத்தில், இதுவரை2,973 விண்ணப்பங்கள் விற்றுள்ளன. முதல் கட்டமாக வந்த 1,600 விண்ணப்பங்கள் விற்று தீர்ந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 2,400 விண்ணப்பங்கள் வரவழைக்கப்பட்டன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இருப்பில் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை, ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு எழுத விரும்புவோர், விண்ணப்பம் பூர்த்தி செய்து அளிக்கலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தபாலில் அனுப்பக்கூடாது; வாங்கிய மையத்திலேயே, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறும், அதற்கான ஒப்புகை சீட்டை பெற்றுக் கொள்ளுமாறும், விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று வரை, மொத்தம் 293 பேர் விண்ணப்பங்களை இம்மையத்தில் அளித்துள்ளனர். வரும் 26ம் தேதி மாலை5.00 மணி வரை, இங்கு விண்ணப்பம் பெறப்படும்.அனைத்து விண்ணப்பங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பிய பின், அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஜன., முதல் வாரத்திலோ, எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி