PG-TRB: 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2014

PG-TRB: 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.


1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,807 முதுநிலை பட்டதாரிகள் பணியிடங்கள் தேவைப்படுகின்றன. அந்த இடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. இதையொட்டி அந்த ஆசிரியர்களை தேர்ந்து எடுக்கும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பள்ளி கல்வித்துறை ஒப்படைத்தது.இதைத்தொடர்ந்து 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை அச்சடித்துஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம்அனுப்பி வைத்தது.விண்ணப்பங்கள் விற்பனை கடந்த 10-ந் தேதி தொடங்கியது. ஆர்வத்துடன் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.

கடைசி நாள்

விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என்பதால் நேற்று விண்ணப்பிப்போர் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 39 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன.இதுவரை ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் எத்தனை பேர் என்ற விவரம் இன்று (வியாழக்கிழமை) தெரியும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எழுத்து தேர்வு ஜனவரி மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.

4 comments:

  1. Friends dnt feel pl wait....ethayae nampitu erugama eppothagu ethavathu oru job puku ponka time waest pannathinka kandippa next year namakana year ra erugum so varum varum ena ethirparthu emaravaendam KANDIPPAKA VARUM KALATHAMATHAM AGALAM so pl dnt waest u r time friends by

    --MADURAI RAJKUMAR

    ReplyDelete
  2. Kaalam kadanthu kidaikkum ethum mathippu mikkathu.. neethi ondrai thavira kaalam kadanthu kidaikkum neethi... athu marukkapatta neethikku samamm...

    ReplyDelete
  3. நண்பர்களே....... ஏமாறுவது இயற்கை,,,,,,,,,,,,ஏமாற்றப்படுவது செயற்கை,,,,,,
    நாம் செயற்க்கையின் கையில் உள்ளோம்,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  4. Hi kalam katanthalum kantippa kitaikkum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி